பூமியின் ராஜ்ஜியங்கள் எட்டு

ஜலப்பிரளயத்திற்கு பின்பு தான் பூமியின் பெரும்பாலான இடங்கள் மனிதர்களால் குடியேற்றம் பெற்றன என்று நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். இதற்குப்பின் தான் எகிப்துதேசம் என்பதே வேதத்தில் உள்ளே வருகின்றது. ஆபிரகாம் கானானில் பஞ்சம் உண்டானபடியால் எகிப்துக்கு போனான் (ஆதியாகமம் 12:10) என்று முதல்முறையாக வேதாகமத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆபிரகாமுடைய காலம் தொடங்கி, உலகம் என்றால் தற்போதைய ஐரோப்பா, ஆசியா, ஆசியா மைனர் (மத்திய கிழக்கு நாடுகள்), ஆப்பிரிக்காவின் வடபகுதி மட்டுமே ஆகும்.

இயேசுவின் காலத்தில் உலகம்

இயேசுகிறிஸ்து உலகத்தில் வந்த காலக்கட்டத்திலும் உலகம் என்றாலே இவைகளில் வாழும் மக்கள்தான். ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் ஆட்சியின் முடிவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் அங்கிருந்து வெளியேறினவர்கள் தான் அடுத்தகட்ட நாகரிக உலகின் முன்னோடிகள். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததே கி.பி 1492 ல் தான். அதுவரை அங்கு ஒருசில நாகரிகம் இல்லாத பழங்குடியினர் மட்டுமே வசித்துவந்துள்ளனர். இதற்குப்பின் தான் அதாவது 16 ஆம் நூற்றாண்டில் தான் மத, அரசியல் ரீதியான காரணங்களால் பல ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டங்களை ஆக்கிரமித்து குடியேற ஆரம்பித்தார்கள். இவர்கள் ஆக்கிரமித்த நிலங்களில் வேலை செய்ய பல கறுப்பின ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டு குடியேற்றப்பட்டனர். இப்படி உருவாகி கி.பி 1776ல் அமெரிக்கா குடியரசாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் தான் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தின் காலனி ஆதிக்க நாடாக இருந்து சமீபத்தில் உருவானதுதான். எனவே வேதப்புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசனங்களில் வரும் ‘உலகம்’, ‘பூமியின் குடிகள்’ போன்ற வார்த்தைகள் அக்காலத்தைய ஐரோப்பாவையும், குடியேற்றம் பெற்றிருந்த மத்திய கிழக்கு ஆசியாவையும், ஒருசில ஆப்பிரிக்க நாடுகளையுமே குறிக்கும். அதிலும் ஐரோப்பிய கண்டத்திலும், ஆசியா மைனரிலும் மட்டுமே குறைந்த நிலப்பரப்பில் பெருமளவு மக்கள் இருந்தனர்.

ராஜ்ஜியங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகங்கள், கடைசிக்காலத்தைக் குறித்த தீர்க்கதரிசன புத்தகங்கள் (Apocalyptic books) ஆகும். இவைகள் இரண்டிலும், பூமியில் இதுவரை ஆண்டுவந்த ராஜ்ஜியங்கள் அல்லது வல்லரசுகளின் தோற்றம், வீழ்ச்சியைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ராஜ்ஜியங்களின் மூலம் அந்திக்கிறிஸ்துவாகிய சாத்தான் எப்படி தனது ஆதிக்கத்தை செயல்படுத்துவான் என்பதையும், அவனது ராஜ்ஜியத்தை இயேசுகிறிஸ்து எப்போது, எப்படி வீழ்த்தி முடிவில்லாத அவரது ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பார் என்பதையும்தான் இந்த இரண்டு புத்தகங்களும் சங்கேத பாஷைகளில் சொல்லியிருக்கின்றன. எனவே நாம் தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் கடைசிகால தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் இதுவரை பூமியில் எழும்பி, அழிந்துபோன ராஜ்ஜியங்களைக் குறித்த அறிவுவேண்டும்.

வரலாறு அறியாததின் விளைவு

உலகப்பிரகாரமான மனிதனாகிய வின்ஸ்டன் சர்ச்சிலே ‘கடந்த கால வரலாற்றை அறியாதவன், வருங்காலங்களில் செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்வான்’ என்று கூறியுள்ளது நம் சபைகளுக்கு மிகப்பொருந்தும். லூக்கா மற்றும் பவுல் எழுதிவைத்த வரலாற்றுக் குறிப்புகளுக்குப் பின் கடந்த 1950 வருடங்களாக பூமியின் ராஜ்ஜியங்களில் என்ன நடந்தது என்று நாம் திரும்பிப்பார்க்காமல் இருப்பதால் தான், நமது சபைகள் இரண்டு தவறுகளை செய்கின்றன. ஒன்று, கடைசிகாலங்களைப் பற்றிய தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனங்களின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதே இல்லை. இரண்டாவது, இன்றைக்கு நடக்கும் காரியங்களை மட்டும் பிடித்துக்கொண்டு தவறான முறைகளில் வியாக்கியானம் செய்து ஜனங்களை தேவையில்லாமல் பயப்படுத்துவது அல்லது இரண்டாவது வாய்ப்பு உண்டு என்று சொல்லி தவறான நம்பிக்கையை வளர்ப்பது. யோசேப்பின் வரலாறை அறியாத பார்வோன் வந்தபின்பு தான் இஸ்ரவேலர்களுக்கு எகிப்தில் உபத்திரவம் ஆரம்பித்தது. அதைப்போல நீங்களும் வரலாற்றை அறியாமல் தவறான நம்பிக்கைகளுக்கு உட்பட்டுவிடக்கூடாது. இந்தப் புத்தகத்தை முழுவதுமாக வாசித்து முடித்தாலே நான் மனபாரத்தோடு வாதிடுவதன் அர்த்தம் உங்களுக்குப் புரிந்துவிடும்.

எத்தனை ராஜ்ஜியங்கள்?

பூமியில் இதுவரை வந்துசென்ற ராஜ்ஜியங்களைக் குறித்த அத்தனை ஆதாரங்களையும் உடைய ஒரே புத்தகம் நம் பரிசுத்த வேதாகமம் தான். அவை எத்தனை என்பதைத் தெரிந்துகொள்ள மூலவசனமாக ஆண்டவர் நமக்கு கொடுத்தது தான் வெளிப்படுத்தின

“நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும். இருந்ததும் இராததுமாகிய மிருகமே எ ட் டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.”

மலை அல்லது பர்வதம் எதைக்குறிக்கும்?

மலை/ பர்வதம்/ தலை/ ராஜாக்கள் என்பது ராஜ்ஜியங்களைக் குறிப்பதாகும்.

‘‘அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று……………………. அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.’’ (தானியேல் 2:35,44)

கடைசிநாட்களின் இயேசுவின் ராஜ்ஜியம் மற்ற ராஜ்ஜியங்களுக்கு மேலாக உயர்த்தப்படும் என்ற தீர்க்கதரிசனத்தை, ஏசாயா இப்படி கூறுகிறார்.

‘‘கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.’’ (ஏசாயா 2:2)

எரேமியா, பாபிலோன் ராஜ்ஜியத்தைப் பர்வதத்திற்கு ஒப்பாகக் கூறியிருக்கிறார்.

‘‘பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன, பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.’’ (எரேமியா 51:24,25)

மிருகம் என்ற ராஜ்ஜியம்

தானியேல் மற்றும் வெளிப்படுத்தலில் வரும் மிருகம் என்ற சங்கேத வார்தையும் ராஜ்ஜியங்களையே குறிக்கும்.

‘‘அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு ராஜாக்கள்.’’ (தானியேல் 17:17)

‘‘அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, பூமியை எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும்’’ (தானியேல் 7:23)

எனவே மலை/பர்வதம்/மிருகம் = ராஜாக்கள் = ராஜ்ஜியங்கள்

ஏழு ராஜாக்கள் என்ற ராஜ்ஜியங்கள்

முன்பு சொன்ன வசனங்களில், பூமியில் எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் அல்லது உலகத்தை ஆளுபவர்கள் தோன்றி மறைவார்கள் என்று யோவான் தெளிவாகக்கூறியுள்ளார். இவைகளைப் பற்றிதான் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன புத்தகங்கள் திரும்பத் திரும்ப பல காரியங்களைக் கூறுகிறது.

  • வெளிப்படுத்தின விசேஷம் யோவானால் எழுதப்படும்போது உலக வல்லரசாக இருந்தது ‘சீசர்களால் ஆளப்பட்ட ஒன்றிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம்’ ஆகும். இதைத்தான் ‘ஒருவன் இருக்கின்றான்’ என்று நிகழ்காலத்தில் யோவானுக்கு சொல்லப்பட்டுள்ளது.
  • இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள்’ என்று சொல்லப்பட்டதன் மூலம் யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட கி.பி 96 ஆம் வருடத்திற்கு முன்பதாக, அதாவது தற்போது ஆட்சிசெய்துவரும் ஆறாம் ராஜ்ஜியமாகிய ரோம சாம்ராஜ்ஜியத்திற்கு முன்பாக ஐந்து ராஜ்ஜியங்கள் எழும்பி விழுந்துவிட்டன என்று அர்த்தப்படும்.
  • `மற்றவன் இன்னும் வரவில்லை’ என்பதினால் ரோம சாம்ராஜ்ஜியத்திற்குப் பின் ஏழாவதாக இன்னொரு ராஜ்ஜியம் எழும்பும் என்று உறுதியாகின்றது,
  • `இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப் போகிறவனுமாயிருக்கிறான்’ என்பதன் மூலம் எட்டாவதாகவும் ஒரு ராஜ்ஜியம் தோன்றும்; ஆனால் அது தனி ராஜ்ஜியமாக இல்லாமல் அதற்கு முந்தைய ஏழாவது ராஜ்ஜியத்தின் வழித்தோன்றலாகவே இருக்கும் என்று நாம் அறிந்துகொள்ளலாம்.
  • அப்படியானால் பூமியில் தோன்றும் மொத்த ராஜ்ஜியங்கள் எட்டு ஆகும். மிகச்சரியாக சொல்லப்போனால் ஏழு ஒரிஜினல் ராஜ்ஜியங்களாகும்.

எவைகளெல்லாம் இந்த ராஜ்ஜியங்கள்?

இந்த ராஜ்ஜியங்கள் எவைகள் என்று அறிந்துகொள்ள உதவியாக கர்த்தர் அருளியது தான் தானியேல் தீர்க்கதரிசன புத்தகம். நேபுகாத்நேச்சார் கண்ட ‘நான்கு’ உலோகங்களால் செய்யப்பட்ட சிலையைப் பற்றிய கனவும் அதற்கு தானியேல் கொடுத்த விளக்கமும் தானியேல் 2 ஆம் அதிகாரம் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒத்த மற்றும் இந்த சிலையில் சொல்லப்பட்ட அதே ராஜ்ஜியங்கள் தான் தானியேலுக்கு சொப்பனத்தில் ‘நான்கு’ வகை மிருகங்களாக (தானியேல் 7 ஆம் அதிகாரம்) வெளிப்படுத்தப்பட்டது.

எப்படி கணக்கிடுவது?

தானியேலின் சிலை மற்றும் மிருகம் சொப்பனங்களிலிருந்து, தானியேலின் காலம் முதல் (கி.மு ஆறாம் நூற்றாண்டு) யோவான் காலம் (கி.பி முதல் நூற்றாண்டு) வரை இருந்த ராஜ்ஜியங்கள் எவை என்றும், யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட தரிசனங்களின்படி புதிய ஏற்பாட்டு கால ராஜ்ஜியங்கள் எவை என்பதையும், தானியேலின் காலத்திற்கு முன்பு இருந்த ராஜ்ஜியங்கள் எவை என்பதை நாளாகமம் புத்தகம், ஏசாயா முதல் எசேக்கியேல் தீர்க்கதரிசன புத்தகங்களிலிருந்தும் நம்மால் எளிதில் கணக்கிட முடியும்.

கீழ்க்காணும் அட்டவணையை நீங்கள் பார்க்கும் முன்பு நீங்கள் தானியேல் 2 மற்றும் 7 வது அதிகாரங்களை ஒருமுறை வாசிக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒவ்வொரு ராஜ்ஜியங்களைப் பற்றியும் நாம் பின்வரும் அத்தியாயங்களில் விலாவாரியாகப் பார்க்க இருப்பதால், இது உங்களுக்குப் புரிய சிரமமாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. ஒரு கழுகுப்பார்வைக்காக இந்த அட்டவணையைக் கொடுத்துள்ளேன்.

அட்டவணை 2: தானியேல் மற்றும் யோவானின் தரிசனங்களில் ராஜ்ஜியங்கள்

தானியேல் 2
(சிலை தரிசனம்)
தானியேல் 7& வெளி 13
(மிருகம்)

ராஜ்ஜியம்

காலக்கட்டம்

பொன்னா லான தலை

கழுகின் செட்டை களையுடைய சிங்கம்

பாபிலோன் (3 வது ராஜ்ஜியம்)

கி.மு 625- கி.மு 539 (இஸ்ர வேலர்கள் பாபிலோனில் கிமு 605 -535 வரை 70 வருடம் இருந்தனர்)

வெள்ளி யாலான மார்பு மற்றும் புயங்கள்

மூன்று விலா எலும்புகளை வாயில் வைத்திருந்த கரடி

மேதிய- பெர்சியா (4வது ராஜ்ஜியம்)

கி.மு 539-கி.மு 334

வெண்கலத் தாலான வயிறு மற்றும் தொடை

நான்கு தலை, நான்கு செட்டைகள் இருந்த சிவிங்கி (சிறுத்தைப்புலி)

கிரேக்கம் (5 வது ராஜ்ஜியம்)

கி.மு 334- கி.மு 166

இரும் பாலான கால்கள்

*இரும்பாலான பற்கள், 10 கொம்புகள் உடைய பயங்கரமும், பலத்ததுமான மிருகம்

* ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது (வெளி 12:3)

ஒன்றுபட்ட ரோம சாம் ராஜ்ஜியம் (6 வது ராஜ்ஜியம்)

கி.மு 166- கி.பி 476

இரும்பும் களி மண்ணும் கலந்த பாதங்கள், இரும்பு-கிழக்கு ரோம ராஜ்ஜியம்

களிமண்-  மேற்கு ரோம ராஜ்ஜியம்

*10 கொம்புகளுக்கு இடையே தோன்றிய சின்னக்கொம்பு

*ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும், அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமமும் இருந்த முதலாம் மிருகம். (வெளி 13:1)

*ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். (வெளி 17:3)

10 சிறு ராஜ்ஜியங் களாக உடைந்த மேற்கு ரோம ராஜ்ஜியம் மற்றும் அதிலிருந்து தோன்றிய போப்புகளின் தலைமை யிலான கத்தோலிக்க ரோமப் பேரரசு

(7 வது ராஜ்ஜியம்)

*கி.பி 476 ல் உடைந்த மேற்கு ரோமப் பேரரசு (Divided roman empire) 10 மாநிலங்களாகப் பிரிந்து கிடந்தது.

*கி.பி 538 முதல் கி.பி 1798  வரை போப்புகளின் (சின்னக் கொம்பு) தலைமையில் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியமாக ஒருங்கிணைக்கப் பட்டது.

10 கால் விரல்கள்.

*யோவான் கண்ட இரண்டாவது மிருகம் (வெளி 13;11)
**எட்டாவதும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறதும், நாசமடையப் போகிறதுமான மிருகம் (வெளி 17:11)
இன்னும் ராஜ்ஜியம் பெறாத வேறே பத்து கொம்புகள் (வெளி 17;12)
வாடிகன் **மற்றும் அதனைப் பின்னனியில் இருந்து இயக்கும் பத்து ஐரோப்பிய கூட்டணி நாடுகள் (EU)
(8 ஆவது மிருகம்)

* 1929 ல் வாடிகன் மீண்டும் உருவானது.

**மீண்டும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் மூலம் மறைமுகமாக உலகைக் கட்டுப்படுத்த ஆரம்பித்து இன்றுவரை (கி.பி 2021) நீடீக்கிறது

*கையால் பெயர்த் -தெடுக்கப் படாத கல்

** பெரிய பர்வத மானது

*மனுஷகுமாரனுக்கு ஒப்பானவர்

**நித்திய ராஜ்ஜியம்

இயேசுவின் முடிவில்லாத ராஜ்ஜியம் (1000 வருட அரசாட்சி-நியாய தீர்ப்பு-பரலோகம்)

இயேசுவின் இரண்டாம் வருகை- பிதா ஒருவர் மட்டுமே அந்தநாளை அறிவார் (மத்தேயு 24:36)

படம் 7: தானியேலின் மிருகங்கள் மற்றும் சிலை தரிசனம்

படம் 8: யோவானின் மிருக தரிசனம்

இனி தானியேல் அமைச்சராக இருந்த பாபிலோன் சாம்ராஜ்ஜியத்திற்கு முன்பதாக இருந்த இருபெரும் சாம்ராஜ்ஜியங்கள் எவை என்று மற்ற தீர்க்கதரிசன புத்தகங்களின் அடிப்படையில் சுருக்கமாகப் பார்ப்போம்.

எகிப்து சாம்ராஜ்ஜியம் (கி.மு 2100-கி.மு 605)

நான் ஏற்கனவே சொன்னதுபோல, எகிப்து என்ற தேசம் ஆபிரகாமின் காலத்திலிருந்தே இருந்தது. அவ்வப்போது பக்கத்து நாடுகளை யுத்தத்தில் ஜெயித்திருந்தாலும், சாலமோன் காலத்திற்குப் பிறகு இஸ்ரவேல் தேசம் இரண்டு ராஜ்ஜியங்களாக பிரிந்த பின் வந்த காலக்கட்டத்தில் அது வல்லரசாக இருந்தது. கர்த்தருக்கு கீழ்படியாத இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களை அவர் ஆரம்பத்தில் எகிப்து ராஜாக்கள் கையிலும், நடுவில் அசீரிய ராஜாக்கள் கையிலும், கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கையிலும் ஒப்புக்கொடுத்தார் என்பதை நாளாகமம் மற்றும் இராஜாக்கள் புத்தகங்களில் வாசிக்கலாம். பின்பு மேதிய-பெர்சிய சாம்ராஜ்ஜியத்தின் முதல் மன்னனான கோரேஸ் என்பவன் கையால் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து யூதர்களை விடுவித்தார் என்பதை எஸ்றா, நெகேமியா புத்தகங்களிலிருந்தும் நாம் அறிந்துகொள்ளலாம்.

இந்த எகிப்து உலக சாம்ராஜ்ஜியமாக இருந்தது என்பது வரலாற்றில் மட்டுமல்ல, நமது கர்த்தர் தந்தருளின வேத புத்தகத்தின் தீர்க்கதரிசன புத்தகங்களிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி ஏராளமான அதிகாரங்கள் இருந்தாலும் நாம் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம். குறிப்பாக எரேமியா 46, எசேக்கியேல் 29&32 ஆம் அதிகாரங்களில் `எகிப்தின் பாரம்’ என்று ஆரம்பிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ளது.

எகிப்தின் பலம் குறித்த ஆதாரங்கள்

படம் 9: எகிப்தியர்களின் முதலை தெய்வங்கள்

‘‘எகிப்து மகா நேர்த்தியான கடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து (பாபிலோன்) வருகிறான்.’’ (எரேமியா 46:20)

‘‘கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,’’ (எசேக்கியேல் 29:3)

‘‘மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.’’ (எசேக்கியேல் 32:2)

இப்படி ‘விலங்குகளுக்குள்ளே கடாரி, தண்ணீரில் முதலை, ஜாதிகளுக்குள்ளே பாலசிங்கம்’ என்று கர்த்தரே சொல்லும் அளவிற்கு வல்லமையான ராஜ்ஜியமாக அதிகாரம் பெற்றிருந்தது. எகிப்தின் படையெடுப்புக்கு, இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜ்ஜியங்களும் தப்பவில்லை. இவர்கள் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்த போதெல்லாம் எகிப்து ராஜாக்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டனர்.

‘‘யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்து மூன்று வயதாயிருந்து, மூன்றுமாதம் எருசலேமில் அரசாண்டான் . அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி,’’ (2 நாளாகமம் 36:2,3)

‘‘அவர்கள் (இஸ்ரவேலர்) கர்த்தருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான்..’’ (2 நாளாகமம் 12:2)

எகிப்தின் வீழ்ச்சி

ஆனால் கர்த்தருக்கு விரோதமாக பெருமைகொண்டு அவரையே எதிர்த்து நின்றதால் தான் எகிப்து தள்ளப்பட்டது என்று மேலே சொன்ன எரேமியா, எசேக்கியேல் அதிகாரங்களிலிருந்து ஏராளமான ஆதாரங்கள் சொல்லமுடியும். இங்கு ஒருசில முக்கிய வசனங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். முக்கியமாக எகிப்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வசம் ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதை அவனுக்குக் கொடுத்தவரும் கர்த்தரே என்பதற்கான ஏராளமான ஆதாரங்களும் தீர்க்கதரிசன புத்தகங்களில் உள்ளன.

‘‘எகிப்து தேசம் பாழும் வனாந்தரமுமாகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் நதி என்னுடையது, நான் அதை உண்டாக்கினேன் என்று சொன்னானே.’’ (எசேக்கியேல் 29:9)

‘‘எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருஷம் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன்’’.

‘‘அது இனி ஜாதிகளின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்யங்களிலும் அற்பமானதாயிருக்கும்; அவர்கள் இனி ஜாதிகளை ஆளாதபடிக்கு அவர்களைக் குறுகிப்போகப்பண்ணுவேன்.’’

‘‘ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.’’ (எசேக்கியேல் 29:12,15,19)

‘‘மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை. பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.’’ (எசேக்கியேல் 30:21,24)

‘‘எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:’’ (எரேமியா 46:2)

‘‘எகிப்தின் ராஜா (யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனின் காலத்திற்கு) அப்புறம் தன் தேசத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை; எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதிமட்டும் எகிப்தின் ராஜாவுக்கு இருந்த யாவையும் பாபிலோன் ராஜா பிடித்திருந்தான்.’’ (2 ராஜாக்கள் 24:7)

இந்த வசனங்களின்படி எகிப்து இனி ஒருபோதும் ஒரு சாம்ராஜ்ஜியமாகக் கருதப்படாத அளவிற்கு குறுகிப்போகும் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறி, இன்றைய காலம் வரை, குறிப்பாக கி.பி 1967 ல் நடந்த ஆறுநாள் யுத்தத்தில் குட்டி நாடான இஸ்ரவேல் கூட ஓடஓட விரட்டும் அளவிற்கு ஒன்றுமில்லாமல் போனது. மேலும் எகிப்து வீழ்ந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கையில்தான் என்பதும் தெளிவாகின்றது.

நாம் வெளிப்படுத்தின புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சங்கேதபாஷைகளைப் புரிந்துகொள்வதற்கான பல ஆதார வசனங்களும் இந்த தீர்க்கதரிசன புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளன. பின்வரும் அத்தியாயங்களில் சங்கேத மொழிகளை விளங்கிக்கொள்ள இவை உங்களுக்கு உதவும் என்பதால் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். எகிப்து ராஜ்ஜியத்தின் அழிவைப்பற்றி ஆண்டவர் சொல்லும்போது

‘‘உன்னை நான் அணைத்துப்போடுகையில் (அழிக்கையில்), வானத்தை (சிங்காசனத்தை) மூடி, அதின் நட்சத்திரங்களை (ஆலோசகர்களை, அமைச்சர்களை) இருண்டுபோகப்பண்ணுவேன் (அழிப்பேன்); சூரியனை (ராஜாவை) மேகத்தினால் மூடுவேன் (தள்ளிவிடுவேன்), சந்திரனும் (பிரபுக்கள்) தன் ஒளியைக்கொடாதிருக்கும். நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் (தேசத்தின் தலைவர்களை) உன்மேல் இருண்டுபோகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை (அழிவை) வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.’’ (எசேக்கியேல் 32:7,8).

தானியேல், வெளிப்படுத்தல் போன்ற சங்கேத பாஷைகள் நிறைந்த தீர்க்கதரிசன புத்தகங்களை விளங்கிக்கொள்ள, நாம் மற்ற தீர்க்கதரிசன புத்தகங்களில் காணப்படும் விளக்கங்களை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வேத வசனத்தின்படி வியாக்கியானம் செய்தால் மட்டுமே தவறுகள் நேரிடாது.

அசீரிய ராஜ்ஜியம் (கி.மு 1110-கி.மு 606)

அசீரியாவின் எழுச்சி

எகிப்து மெதுவாக வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பிக்கும் காலத்திற்கும், பாபிலோன் ராஜ்ஜியம் உலகம் முழுவதும் ஸ்தாபிக்கப்படும் காலத்திற்கு முன்னும் உள்ள இடைவெளியில் உலக வல்லரசாக இருந்தது அசீரிய ராஜ்ஜியம் ஆகும். எகிப்தைப் பற்றி சொல்லப்பட்ட அதே நாளாகமம், இராஜாக்கள், எரேமியா, எசேக்கியேல் புத்தகங்களில் தான் அசீரியாவின் பலத்தையும், அதன் வீழ்ச்சியையும் கர்த்தர் சொல்லிவைத்திருக்கிறார். கூடுதலாக நினிவேயின் பாரம் என்று, அசீரியாவின் தலைநகரான நினிவேயின் அழிவை நாகூம் தீர்க்கதரிசன புத்தகம் முழுவதும் எடுத்துரைக்கிறது. கர்த்தருக்கு விரோதமாக தொடர்ந்து விக்கிரகவணக்க பாவம் செய்துகொண்டிருந்த இஸ்ரவேலின் 10 கோத்திரங்களை கர்த்தர் இரண்டு தவணைகளில் அப்போது வல்லரசாக இருந்த அசீரியாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

‘‘இஸ்ரவேலின் (19 வது) ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து,ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக (முதல் சிறைபிடிப்பு) அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.’’ (2 இராஜாக்கள் 15:29)

மீதமிருந்தவர்கள் இஸ்ரவேல் ராஜ்ஜியத்தின் கடைசி ராஜாவாகிய ஒசெயாவின் நாட்களில் அசீரியாவுக்கு சிறைக்கைதிகளாக் கொண்டுபோக ஆண்டவர் ஒப்புக்கொடுத்தார்.

‘‘அவனுக்கு (ஒசெயா) விரோதமாக அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் வந்தான்; அப்பொழுது ஓசெயா அவனைச் சேவிக்கிறவனாகி, அவனுக்குப் பகுதிகட்டினான்.’’

‘‘ஓசெயா, எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினதும், தனக்கு வருஷந்தோறும் செய்ததுபோல், பகுதி அனுப்பாதே போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான். ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா ராஜா (இஸ்ரவேலின் தலைநகர்) சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய், அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.’’ (2 இராஜாக்கள் 17: 3-6)

இஸ்ரவேல் ராஜ்ஜியம் முழுவதும் வீழ்ச்சியடைந்த பின்னர், மீதமிருந்த யூதா ராஜ்ஜியத்தின் இரண்டு கோத்திரங்களுக்கு எதிராகவும் அசீரிய ராஜாக்கள் படையெடுத்தனர்.

‘‘யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான். இதோ, (எசேக்கியா ராஜாவே) நெரிந்த நாணல்கோலாகிய (தற்போது பலவீனம் அடைந்துவரும்) அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான். ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?’’ (2 இராஜாக்கள் 18: 13, 21 ,33)

ஆனால் கர்த்தர் எசேக்கியா ராஜாவின் நிமித்தமாக யூதா ராஜ்ஜியத்தை அசீரியாவின் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. மேற்கண்ட வசனங்களின்படி, எகிப்து சாம்ராஜ்ஜிமாக இருந்து பலவீனப்பட்டிருந்த நேரத்தில் தான் அசீரியா உச்சகட்ட அதிகாரத்தில் இருந்தது என்று தெளிவாகப் புரிகிறது. அசீரியாவுக்கு தப்புவிக்கப்பட்ட யூதா ராஜ்ஜியம், மனாசேயின் பாவத்தினால் பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் கையில் சிறையாகக் கர்த்தரால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதைப்பற்றி 2 ராஜாக்கள் மற்றும் 2 நாளாகமத்தின் கடைசி அதிகாரங்களில் பார்க்கலாம்.

அசீரியாவின் வீழ்ச்சி

இஸ்ரவேலர் பாவம் செய்து மீறும்போது யூதர்களையும், மற்ற பல ஜாதிகளையும் கர்த்தர் அசீரிய ராஜாக்களின் கையில் அவ்வப்போது ஒப்புக்கொடுத்தார். ஆனால் கர்த்தர் தான் தனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது என்று அசீரிய ராஜாக்கள் உணராமல், கர்த்தரின் வாக்குத்தத்தம் பெற்ற சந்ததியான இஸ்ரவேலை முற்றிலும் அழிக்க நினைத்தனர். இதனால் கர்த்தரின் கோபம் அசீரியாவுக்கு விரோதமாக மூண்டதால் அவர்களையும் பாபிலோனியர் வசம் ஒப்படைத்தார்.

‘‘என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம். அவபக்தியான (இஸ்ரவேல்) ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக்கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன். அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.’’ (ஏசாயா 10:5-7)

‘‘ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பைஅனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார். இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி, ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து, அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும் புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.’’ (ஏசாயா 10:16-18)

‘‘இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது. (எசேக்கியேல் 31:3) என்று ஆரம்பித்து அசீரியாவின் மகிமையை அடுத்த வசனங்களில் சொல்லிவிட்டு…

‘‘ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன் வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்கவிட்டபடியினாலும், அதின் இருதயம் தன் மேட்டிமையினால் உயர்ந்து போனபடியினாலும்,நான் அதை ஜாதிகளில் மகா வல்லமையுள்ளவன் கையிலே (நெபோபலாசார்- நேபுகாத்நேச்சாரின் தந்தை) ஒப்புக்கொடுத்தேன்;அவன் தனக்கு இஷ்டமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்தினிமித்தம் அதைத் தள்ளிப்போட்டேன்.’’ (எசேக்கியேல் 31:10,11) என்று அதன் முடிவையும் கர்த்தர் அறிவித்துள்ளார்.

கடைசியாக அசீரியாவின் தலைநகரான நினிவேக்கு (தற்போதைய வடக்கு ஈராக்) விரோதமான அழிவு, நாகூம் தீர்க்கதரிசன புத்தகத்தில் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது. அது எதற்காக அழிக்கப்பட்டது, எப்படி இனி ஒரு சாம்ராஜ்ஜியமாக எழும்ப முடியாது என்பதற்கு ஆதாரமாக நாகூம் 3 ஆம் அதிகாரத்தின் ஒருசில வசனங்களை மட்டும் காண்பிக்கிறேன்.

‘‘தன் வேசித்தனங்களினால் (விக்கிரகங்களினால்) ஜாதிகளையும் தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி, உன்மேல் தீட்டானவைகளை எறிந்து உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்.

‘‘அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலஸ்தர் படுத்திருப்பார்கள்; உன் ஜனங்கள் பர்வதங்களின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை. உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?’’

இதில் ஒரு தேசத்தின் அழிவைக்குறிக்கும் சங்கேத மொழிகள் பல விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாததால் தான் பலர் வெளிப்படுத்தலில் வரும் எக்காளங்கள், வாதைகளினால் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தின் மீது பல நூற்றாண்டுகளாக, பலவகைகளில் ஏற்பட்ட அழிவைத் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள்; இன்னும் அவைகள் நிறைவேறவில்லை. கடைசி ஏழு வருடங்களில் தான் ‘கொட்டப்போகிறது’ என்று தவறாகப் புரிந்துவைத்துள்ளார்கள். உதாரணமாக மேலே கண்ட வசனங்களில் ஒரு தேசத்தின் மீது கர்த்தரால் வரும் அழிவைக் குறிக்க பல சங்கேத மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  • இளைப்பை அனுப்புவார்
  • தீக்கொளுத்துவார், பயிர்களுக்குள் அக்கினியைக் கொளுத்துவார்
  • வஸ்திரத்தை விலக்குவார்
  • நிர்வாணத்தை வெளிப்படுத்துவார்
  • மானத்தைத் தெரியப்பண்ணுவார்
  • காயப்படுத்துவார்

உலக வல்லரசான பாபிலோன்

இப்படி உலக வல்லரசாக இருந்த எகிப்தை அது பலவீனப்பட்டிருந்த காலத்திலும், அசீரியாவை அது அதிகாரத்தின் உச்சியிலிருந்த காலத்திலும் வீழ்த்தியவன் வேறு யாருமல்ல; புதிய பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தின் (Neo Babylonian Kingdom) மன்னனான நேபுகாத்நேச்சாரும் அவனது தந்தை நெபோபலாசாரும் தான். இதே காலக்கட்டத்தில் தான் நேபுகாத்நேச்சார் யூதா ராஜ்ஜியத்தையும் வீழ்த்தி, அவர்களை சிறைபிடித்துக்கொண்டு போனான். இவ்விதமாக முதல் இரண்டு சாம்ராஜ்ஜியங்களாகிய எகிப்தும், அசீரியாவும் வீழ்ச்சியடைந்து மூன்றாம் உலக சாம்ராஜ்ஜியமாக பாபிலோன் உருவெடுத்தது.

‘‘தன் வேசித்தனங்களினால் (விக்கிரகங்களினால்) ஜாதிகளையும் தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி, உன்மேல் தீட்டானவைகளை எறிந்து உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்.

‘‘அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலஸ்தர் படுத்திருப்பார்கள்; உன் ஜனங்கள் பர்வதங்களின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை. உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?’’

இதில் ஒரு தேசத்தின் அழிவைக்குறிக்கும் சங்கேத மொழிகள் பல விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாததால் தான் பலர் வெளிப்படுத்தலில் வரும் எக்காளங்கள், வாதைகளினால் அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியத்தின் மீது பல நூற்றாண்டுகளாக, பலவகைகளில் ஏற்பட்ட அழிவைத் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள்; இன்னும் அவைகள் நிறைவேறவில்லை. கடைசி ஏழு வருடங்களில் தான் ‘கொட்டப்போகிறது’ என்று தவறாகப் புரிந்துவைத்துள்ளார்கள். உதாரணமாக மேலே கண்ட வசனங்களில் ஒரு தேசத்தின் மீது கர்த்தரால் வரும் அழிவைக் குறிக்க பல சங்கேத மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  • இளைப்பை அனுப்புவார்
  • தீக்கொளுத்துவார், பயிர்களுக்குள் அக்கினியைக் கொளுத்துவார்
  • வஸ்திரத்தை விலக்குவார்
  • நிர்வாணத்தை வெளிப்படுத்துவார்
  • மானத்தைத் தெரியப்பண்ணுவார்
  • காயப்படுத்துவார்

உலக வல்லரசான பாபிலோன்

இப்படி உலக வல்லரசாக இருந்த எகிப்தை அது பலவீனப்பட்டிருந்த காலத்திலும், அசீரியாவை அது அதிகாரத்தின் உச்சியிலிருந்த காலத்திலும் வீழ்த்தியவன் வேறு யாருமல்ல; புதிய பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தின் (Neo Babylonian Kingdom) மன்னனான நேபுகாத்நேச்சாரும் அவனது தந்தை நெபோபலாசாரும் தான். இதே காலக்கட்டத்தில் தான் நேபுகாத்நேச்சார் யூதா ராஜ்ஜியத்தையும் வீழ்த்தி, அவர்களை சிறைபிடித்துக்கொண்டு போனான். இவ்விதமாக முதல் இரண்டு சாம்ராஜ்ஜியங்களாகிய எகிப்தும், அசீரியாவும் வீழ்ச்சியடைந்து மூன்றாம் உலக சாம்ராஜ்ஜியமாக பாபிலோன் உருவெடுத்தது.

இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான். ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் அசீரியா ராஜாவை தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து,’’ (எரேமியா 50:17,18)

ஏழு ராஜ்ஜியங்கள், இதோ

இதுவரை பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசன புத்தகங்களில் சொல்லப்பட்டவை எல்லாம், நடந்துமுடிந்த பின்பு எழுதப்பட்ட வரலாறு அல்ல. நடக்கப்போவதை அதற்கு முந்தைய காலங்களிலேயே கர்த்தர் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தியவைகள் தான் அப்படியே நிறைவேறின. ‘‘நடந்ததை சொல்வது வரலாறு; நடக்கப்போவதைச் சொல்வது தீர்க்கதரிசனம்’’. இப்படி தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்ட ஒவ்வொரு ராஜ்ஜியங்களின் தோற்றமும், அழிவும் நிறைவேறிவிட்டதை நீங்கள் வரலாற்றில் மிகத்தெளிவாகப் பார்க்கலாம். தீர்க்கதரிசன புத்தகங்களில் பழைய ஏற்பாட்டு ராஜ்ஜியங்களையும், இஸ்ரவேலையும் பற்றி சொல்லப்பட்டவைகளில் பெரும்பாலானவைகள் நிறைவேறிவிட்டது என்பதால், அவை இன்று நமக்குத் தேவையில்லை என்ற தவறான எண்ணம் உங்கள் மனதிலே தோன்றிவிடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாயிருக்கிறேன். அவைகள் இன்றும் நமக்கும் நம் சபைகளுக்கும் ஆவிக்குரிய வகையில் பொருந்தும்; சில தீர்க்கதரிசனங்கள் இரட்டை நிறைவேறுதலை (Double Fulfilment) உடையது என்பதும் உண்மை. நான் இதில் ராஜ்ஜியங்களைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பதால் தீர்க்கதரிசனப் புத்தகங்களின் வரலாற்று ஆதாரங்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இதனடிப்படையில் நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் எட்டு ராஜ்ஜியங்கள் எவை என்பது உங்களுக்கு தெளிவாகப் புரிந்திருக்கும் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன். அவைகள் வரிசைகள் முறையே:

  1. எகிப்து
  2. அசீரியா
  3. பாபிலோன்
  4. மேதிய-பெர்சியா
  5. கிரேக்கம்
  6. ஒன்றிணைந்த சீசர்களால் ஆளப்பட்ட ரோம்
  7. ரோமன் கத்தோலிக்க பேரரசு/ போப்பாதிக்கம் (Papacy)
  8. வாடிகன் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு (7 வதின் வழித்தோன்றல்)

இந்த அடிப்படை வரலாறைப் புரிந்துகொள்ளாவிட்டால், தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசன பாஷைகளை எள்ளளவும் புரிந்துகொள்ள முடியாது. இதைத்தான் இயேசு யோவானுக்கு ‘ஏழு மலைகளும் ஏழு ராஜாக்களாம்’ என்று வெளிப்படுத்தியிருக்கிறார். இவைகள் ரோம் நகரத்தின் மலைகளைக் குறிக்கவில்லை; மாறாக அந்திகிறிஸ்துவாகிய சாத்தானால் பயன்படுத்தப்பட்ட ராஜ்ஜியங்களைப் பற்றிய தீர்க்கத்தரிசனமாகும். நாம் இந்த அத்தியாயத்திலே எகிப்து, அசீரிய ராஜ்ஜியங்களைப் பற்றி ஓரளவு புரிந்துகொண்டோம். அடுத்த அத்தியாயங்களில் தானியேலோடு கூட பயணித்து பாபிலோன் முதல் ரோம் வரைக்கும் செல்வோம். நீங்கள் ஆயத்தமா?

 

4 comments on “பூமியின் ராஜ்ஜியங்கள் எட்டு

    1. According to Bible the first two kingdoms are Egypt and Assyria. Prophetic kingdoms are related to Israel, not with the other existed countries. In Kings and Chronicles Israel was frequently suppressed by egypt and Assyria which were the reigning kingdoms. India and china never reigned the world or became world power like greek or Rome.

  1. Sir, I agree with the truths about 8 kingdoms in the world..if so what about other kingdoms existed in India and other eastern parts of world including China, Japan and Mangolia? How do we justify?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *