எட்டாவது மிருகமும் முடிவுகால யுத்தங்களும் (இன்றும் இனியும்)

நாம் ஏற்கனவே ஏழு மிருகங்களை (ராஜ்ஜியங்களை) பார்த்தோம். ஏழாவது ராஜ்ஜியமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் தான் கொஞ்சம் காலம் (1260 வருடங்கள்) தரித்திருக்கவேண்டும் என்றும் பார்த்தோம். இந்த ஏழு ராஜ்ஜியங்களும் ‘ஒரிஜினல்’ ராஜ்ஜியங்கள்; அதாவது வெவ்வேறு ஜாதிகளால், வெவ்வேறு இடங்களில் தோற்றுவிக்கப்பட்ட தனித்தனி ராஜ்ஜியங்கள். ஆனால் எட்டாவது ராஜ்ஜியம் என்பது ஏழாவது ராஜ்ஜியமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் வீழ்ந்த பின்பு அதன் மிச்சத்திலிருந்து தோன்றும் ‘பிரதி எடுக்கப்பட்ட’ ராஜ்ஜியமும், கடைசியாக பூமியில் இருக்கும் ராஜ்ஜியமாகும்.

‘‘அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள் (எகிப்து முதல் கிரேக்கம் வரை), ஒருவன் இருக்கிறான் (யோவான் காலத்தின் 6 வதான ரோம்), மற்றவன் (7வது) இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் (1260 வருடம்) தரித்திருக்கவேண்டும். இருந்ததும் இராததுமாகிய மிருகமே (மகா பாபிலோனாகிய ரோமின் கடைசி வடிவான ஐரோப்பிய கூட்டமைப்பு) எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.’’ (வெளி 17:10,11)

எட்டாவது ராஜ்ஜியத்தின் தன்மைகள்

எட்டாவது ராஜ்ஜியத்தைப் பற்றி இந்த வசனத்தில் சில காரியங்கள் கூறப்பட்டுள்ளது.

  • ஏற்கனவே நாம் பார்த்த  இருந்ததும்  இராததுமான  மிருகமாகிய  மகா  பாபிலோன்  (ரோமன்கத்தோலிக்க ராஜ்ஜியம்) தான் எட்டாவதாகவும் நீடிக்கும்
  • அப்படியானால் இது நிச்சயமாக ஏழாவதிலிருந்து அதன் நீட்சியாகவே வரும்
  • இந்தராஜ்ஜியம் தான் இயேசுவின் வருகையின்போது நாசமடையப்போகும் ராஜ்ஜியம். இதுவரை வந்துசென்ற ராஜ்ஜியங்களெல்லாம், மற்ற ராஜ்ஜியங்களால் அல்லது மனித ராஜாக்களால் நாசமடைந்தது. இந்த எட்டாவது ராஜ்ஜியமே இயேசுவின் நாசியின் சுவாசத்தினால் நேரடியாக நாசமாக்கப்படும்.

ஏற்கனவே பாதாளத்தில் தள்ளப்பட்ட ஒரிஜினல் பாபிலோன் தான் கடைசியில் பாதாளத்திலிருந்து ஏறிவந்த ஆவிக்குரிய மகா பாபிலோனாக மீண்டும் ‘ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியமாக’ வந்தது என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த இருந்ததும், இராததும், மீண்டும் வந்த மிருகமாகிய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தைத் தொடர்ந்து எட்டாவதானவன் வருவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ஏழாவது மிருகமாகிய பாப்பஸி என்ற ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அடைந்த அழிவின் மிச்சத்திலிருந்து வந்த ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன் தான் எட்டாவதான மிருகம் ஆகும். அப்படியானால் எட்டாவது மிருகம் ஐரோப்பிய யூனியன் மற்றும் அதனோடு சேர்ந்திருக்கும் ஸ்திரீயாகிய வாடிகன் சபையும் தான் கடைசி மத-அரசாங்க கூட்டணி ராஜ்ஜியம் (Religio-political system) ஆகும். மேலும் இந்த ராஜ்ஜியம் தான் இயேசுவின் இரண்டாம் வருகையின் காலத்தில் அழிக்கப்படும் ராஜ்ஜியமும் ஆகும். மொத்தத்தில் ரோம் இருக்கும் ஐரோப்பா தான் அப்போதிலிருந்து இப்போது வரை உலக சாம்ராஜ்ஜியத்தின் தலைமையாக இருந்து வருகிறது மட்டுமல்லாமல், அழிவுகளையும் சந்தித்து வருகிறது; ஏற்கனவே இரண்டு உலக யுத்தங்களில் பேரழிவை சந்தித்ததுபோல (ஏறக்குறைய 10 கோடி பேர்) கடைசி யுத்தத்தில் (3 ஆவது உலக யுத்தம்) அழிவையும் சந்திக்கப்போகிறது.

இந்த எட்டாவது ராஜ்ஜியம், இரகசிய வருகைக்குப் பின்பு வரும் அந்திகிறிஸ்து என்ற மனிதனின் ராஜ்ஜியம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அப்படியல்ல. இந்த ராஜ்ஜியம், வெளிப்படுத்தல் 19 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள கடைசி யுத்தத்தின் முடிவில் இயேசுவால் நேரடியாக அழிக்கப்படும்/ நாசமாக்கப்படும் ராஜ்ஜியம் என்று ஆதாரப்பூர்வமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ராஜ்ஜியத்தின் காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம்.

‘‘பின்பு, (8 ஆவது) மிருகமும் பூமியின் ராஜாக்களும், அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் (இயேசு) அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன். அப்பொழுது மிருகம் (ராஜ்ஜியம்) பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் (பாப்பஸி) பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.’’ (வெளி 19:19,20)

இதுவும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் இன்னொரு வடிவம் தான் என்றும், இதைத் தான் இயேசு அழித்து தனது ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பார் என்றும் தானியேலுக்கு கர்த்தர் 2600 வருடங்களுக்கு முன்னமே வெளிப்படுத்தியுள்ளார்.

‘‘பாதங்களும் (கிழக்கு மற்றும் மேற்கு கத்தோலிக்க ரோம ராஜ்ஜியம்) கால்விரல்களும் (10 ராஜ்ஜியங்களின் ஐரோப்பிய கூட்டணி) பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.’’ (தானியேல் 2:41)

‘‘நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் (இயேசு) பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி அவைகளை நொறுக்கிப்போட்டது.’’ (தானியேல் 2:34)

ரோமப்பேரரசு தான் புதிய ஏற்பாட்டு காலம் முழுவதையும் ஏதாவது ஒருவகையில் ஆளுகை செய்யும் என்பது தான் தானியேல் மற்றும் யோவான் திரும்பத்திரும்ப சொல்லும் காரியமாகும்.

  • ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியம்/ 7 தலைகளையும், தலைகளின் மேல் கிரீடங்களையும், 10 கொம்புகளையும் உடைய மிருகம் – கி.மு முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி 476 வரை
  • 10ஆகஉடைந்த மேற்கு ரோமப்பேரரசு/ களிமண் பகுதியான பாதம் – கி.பி 475 லிருந்து 538 வரை
  • 10ராஜ்ஜியங்களாகப் பிரிந்த ரோமப்பேரரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம்/ 7 தலைகளையும், 10 கொம்புகளையும், கொம்புகளின் மேல் கிரீடங்களையும் உடைய மிருகம் – கி.பி 538 லிருந்து 1798 வரை (1260 வருடங்கள்)
  • இதில்கிழக்கு ரோமராஜ்ஜியம் (இரும்பாலான பாதம்) வீழ்ச்சியடைந்து காண்ஸ்டாண்டிநோபிளில் ஒட்டமான் பேரரசு ஆதிக்கம் ஆரம்பித்தது – கி.பி 1454
  • சிறிதுகாலம் நெப்போலியனின் பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் அரசாங்க அதிகாரத்தின் கையில் கத்தோலிக்க சபை – கி.பி 1798 முதல் கி.பி 1849 வரை
  • மீண்டும்ரோமில் போப்புகளின் (மிருகத்தின் மீது இருந்த ஸ்திரீ) அதிகாரம்- கி.பி 1849 முதல்
  • வாடிகன்என்ற தனி நாடு அங்கீகாரம் – கி.பி 1929
  • இதேசமயம் ஐரோப்பிய கூட்டமைப்பு/ எட்டாவது மிருகம் (European union) கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இவை எல்லாம் ஒரு காலத்தில் ரோமப்பேரரசின் அங்கங்களாக இருந்த நாடுகளாகும் (மிருகத்தின் 10 கொம்புகள்).

ஐரோப்பிய கூட்டமைப்பு

ஐரோப்பிய கூட்டமைப்பு அமைப்பதற்கு எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும் முதல் முக்கிய காரணம் ‘நாடுகளிடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது’ தான். இதற்காகத் தான் இந்த கூட்டமைப்பு நாடுகளிடையே பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்யும் சலுகை முதல், அவைகளுக்குள்ளே ஒரே நாணயமாகிய ‘யூரோ’ பணத்தைப் பயன்படுத்துவது வரை திட்டமிடப்பட்டு நடந்துவருகிறது. ஏனென்றால் இதன் முன்னோடியான முதல் கூட்டமைப்பின் பெயரே ‘European coal and steal community (ECSC-1952)’ஆகும்.

இதன் பின்னர் கி.பி 1957 ல் ‘‘ரோமில்’’ (Treaty of Rome) வைத்து நடைபெற்ற கூட்டத்தில் இது European economic community ஆக மெருகேற்றப்பட்டு, 1992 ல் ஏற்படுதப்பட்ட ‘Maastricht treaty’ மூலமாக Europena union ஆக முழு வடிவம் பெற்று, இன்று உலக வர்த்தகத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இதில் ரோம சாம்ராஜ்ஜியம் உடைந்ததிலிருந்து உருவான 10 நாடுகள் தான் அதிக அதிகாரம் கொண்ட உறுப்பினர்களாக உள்ளன. ஆரம்பத்திலிருந்தே சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து ‘பிரெக்சிட்’ மூலம் இந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியதும் தேவச்செயல் என்றே கருதுகிறேன்.

  • கடைசிமிருகம் (8 ஆவது) = ஐரோப்பிய யூனியன்
  • கடைசிமிருகத்தின் 10 கொம்புகள் (வெளி 17) = ஐரோப்பிய யூனியனின் முக்கிய பத்து நாடுகள்
  • மிருகத்தின் மேலுள்ள ஸ்திரீ = ரோமன் கத்தோலிக்க சபை
  • கள்ளதீர்க்கதரிசி = போப்புகள்
  • மகாபாபிலோனின் தாய் = வாடிகனை மையமாகக் கொண்ட கத்தோலிக்க சபை
  • வெளிப்படுத்தல் 13 ல் யோவான் கண்ட முதல் மிருகம் = ஏழாம் மிருகம்/ ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் (1260 வருடங்கள்)
  • யோவான்கண்ட இரண்டாவது மிருகம் = வாடிகன் (தற்போதைய)
  • யோவானின் இரண்டு மிருகங்களும் சேர்ந்தது தான் ஏழாம் மிருகம்

மகா பாபிலோன்

ஏழாவது ராஜ்ஜியமான ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் கடைசி கால ராஜ்ஜியமாக இருக்குமானால், அதிலிருந்து நேரடியாகத் தோன்றிய ‘ஐரோப்பிய கூட்டணி மற்றும் வாடிகன்’ (Religio-politico-economic union) நிச்சயமாக அதே பெயருக்குப் பொருத்தமாகத் தான் இருக்கமுடியும். எனவே முடிவுகால மகா பாபிலோன் என்பது வாடிகனை மட்டுமல்லாமல், இதன் தொடர்ச்சியாக வந்த ஐரோப்பிய கூட்டமைப்பையும் குறிக்கும். இப்பொழுது இருக்கும் ஐரோப்பிய கூட்டமைப்புக்கும், பழைய பாபிலோனுக்கும் இடையே சம்பந்தம் இருப்பதை அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளுமே ‘சிம்பாலிக்காக’ சொல்லிவருகிறது.

  • Official moto of EU – In varietate concordia(latin), United in diversity (English). பன்முகத்தன்மையில் ஒன்றுபட்டது என்ற இந்த வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்கு பாபேல் கோபுரம் கட்டிய மக்களின் மனநிலை நினைவிற்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் ‘பூமியெங்கும் சிதறிப்போகாதபடிக்கு’ கோபுரத்தைக் கட்டினார்கள்.
  • பிரான்ஸின் ‘‘Strasbourg நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய யூனியனின் பார்லிமெண்டின் கட்டிட வடிவமைப்பு, பாதியில் தடைபட்ட பாபேல் கோபுரத்தின் சாயலில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அதன்வாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிலை, ஒரு ஸ்திரீ மிருகத்தின் மீது ஏறி நின்று பயணம் செய்வது போன்ற உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • கிரீஸ்நாட்டின் யூரோ நாணயத்திலும் மிருகத்தின் மேலுள்ள ஸ்திரீ இடம்பெற்றுள்ளது.

படம் 75: ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றமும் பழைய பாபேல் கோபுரமும்

இதன்படி பார்த்தால் ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம், மகா பாபிலோனின் பண்புகளைக் கொண்டிருந்தது போல, அதனைத் தொடர்ந்து வந்த ஐரோப்பிய கூட்டமைப்பும் கடைசியில் அழியப்போகும் மகா பாபிலோனாக விளங்குகிறது. இவற்றுக்கிடையே என்ன ஒரு வித்தியாசம் என்றால், 1260 வருடங்கள் ஆண்ட ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம் மதம் மற்றும் அரசியல் அதிகாரங்கள் இரண்டையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஆவிக்குரிய வகையில் மட்டுமே வர்த்தகங்களை செய்து ஆத்துமாக்களை வஞ்சித்தது. ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்பு, அரசியல் அதிகாரத்தையும், வர்த்தக அதிகாரத்தையும் கொண்டதாகவும், அதன் பின்னணியில் இருக்கும் வாடிகன் மதக்கொள்கைகளின் தாயகமாகவும் இருந்து இரண்டும் சேர்ந்து மிருகத்தின் மீது அமர்ந்த ஸ்திரீயாக இயங்கிவருகின்றது. எனவே ஏழாம் ராஜ்ஜியமும், எட்டாவது ராஜ்ஜியமும் எல்லா வகைகளிலும் கிட்டத்தட்ட ஒரே ராஜ்ஜியமாகும். எட்டாவது ராஜ்ஜியத்தை, அவ்வேழிலிருந்து தோன்றும் என்றும் கூறுகிறார்.

மறுபடியும் பத்து கொம்புகள்

தானியேல் பார்த்த நாலாம் மிருகமான பயங்கரமும், கெடியுள்ளதுமான மிருகத்தின் தலையில் பத்து கொம்புகள் இருந்ததாகப் பார்த்தோம். அந்த பத்துக் கொம்புகளில் மூன்றை பிடுங்கிவிட்டு சின்ன கொம்பு ஒன்று முளைத்தது என்றும் தானியேல் கண்டதாக ஏற்கனவே பார்த்தோம். அந்த சின்னக்கொம்பு தான் பாப்பஸி என்றும் அந்த பத்து கொம்புகள் கி.பி 476 ல் சிதறியிருந்த ரோம ராஜ்ஜியங்கள் என்றும் பார்த்தோம். இதே ராஜ்ஜியத்தை தான் யோவானும் சமுத்திரத்திலிருந்து வந்த முதல் மிருகமாகப் பார்த்தார். ஆனால் இந்த முடிவுகால மகா பாபிலோனைப் பற்றிப் பேசும் பகுதியில் இன்னொரு பத்து கொம்புகளை யோவான் காண்கிறார். ஏனென்றால் இந்த பத்து கொம்புகள் எட்டாவது மிருகத்தோடே சம்பந்தப்பட்டது.

‘‘நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் (8 ஆம்) மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.’’ (வெளி 17:12)

இதையும், தானியேல் கண்ட பத்து கொம்புகளையும் குழப்பிவிட வேண்டாம். இப்போது பழைய பத்து கொம்புகளை கொஞ்சம் நினைவிலிருந்து ஒதுக்கி விடுங்கள். இந்தப் பத்து கொம்புகள் எட்டாவது மிருகமாகிய ஐரோப்பிய கூட்டணியுடன் சம்பந்தப்பட்டது.

எதிர்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்கள்

இதுவரை, அதாவது வெளிப்படுத்தல் 17 ஆம் அதிகாரம் 11 ஆம் வசனம் வரை சொல்லப்பட்ட தரிசனங்கள் எல்லாம் நாம் வாழும் இந்த 2021 க்கு முன்பாக பல காலகட்டங்களில் நிறைவேறி முடிந்துவிட்டன. ஆனால் மேலே கண்ட 12 ஆம் வசனத்திலிருந்து யோவான் கண்ட தரிசனங்கள் எல்லாம் இன்னும் நிறைவேறவில்லை. அது நிறைவேறப்போவதற்கு மிக நெருக்கமான காலத்தில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஏற்கனவே நடந்து முடிந்தவைகளை வரலாற்று ஆதாரங்களோடு ஒப்பிட்டு உறுதிசெய்ய முடியும். ஆனால் இனி நடக்கப்போகிறவைகளை வசனங்களில் அடிப்படையில் பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு ‘இப்படி இப்படி நடக்கலாம்’ என்று தான் சொல்ல முடியுமே தவிர, ‘நான் சொல்கிறபடி தான் நிச்சயமாக நடக்கும்’ என்று சொல்லமுடியாது.

ஐரோப்பிய கூட்டணி கி.பி 1992 ல் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகின் ஆதிக்க வல்லரசாக வளர்ந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இந்த ஐரோப்பிய கூட்டமைப்பில் தற்போது 28 நாடுகள் இருந்தாலும், அவை பத்து ராஜாக்களாகத் தான் யோவானுக்குக் காண்பிக்கப்பட்டது. அது பின்வரும் காரணங்களுள் ஒன்றாக இருக்கலாம்.

  1. ஏற்கனவே ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்ஜியத்திலிருந்து உருவான ஐரோப்பிய நாடுகளின் நிலப்பரப்புகளை அடிப்படையாகக் கொண்டு பத்து நாடுகள் என்று சொல்லப்பட்டிருக்கலாம்
  2. இப்போது இருக்கிற 28 நாடுகளில் பலம் வாய்ந்த, முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய 10 நாடுகளாக இருக்கலாம்
  3. கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு முழுவதும் உட்பட்ட 10 நாடுகளாக இருக்கலாம்.
  4. ஒரு வேளை கடைசி யுத்தமாகிய மூன்றாம் உலக யுத்தத்தின்போது முக்கிய பங்கெடுக்கும் 10 நாடுகளாக இருக்கலாம்.

ஒரு மணிநேர ராஜ்ஜியம்

நான் மேலே பல யூகங்களை சொன்னதற்குக் காரணம், இந்த பத்து ராஜாக்களும் இன்னும் ராஜ்ஜியம் பெறவில்லை, அல்லது முழு அதிகாரம் பெறவில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. யோவான் காலத்தில் இந்த ராஜாக்கள் இல்லாததால் அப்படி சொல்லியிருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அடுத்ததாக யோவான் சொல்லும் வார்த்தை தான் மிக முக்கியமானது. இந்த பத்து ராஜாக்களும் ‘மிருகத்திடமிருந்து’ ‘ஒரு மணிநேரமளவு’ ராஜாக்களாக நடந்துகொள்ளும் அதிகாரம் பெற்றுக்கொள்வார்கள் என்று யோவான் சொல்கிறார். அதாவது, இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் எட்டாவது மிருகமான ‘ஐரோப்பிய கூட்டமைப்பு’ என்ற மிருகத்திடமிருந்து முழு அதிகாரத்தையும் பெற்றுக்கொள்கிறார்களாம். இதனால் இந்த எட்டாவது மிருகத்தின் காலத்தில் இந்த பத்து ராஜ்ஜியங்கள் இருக்கத்தான் செய்யும்; ஆனால் கடைசி யுத்தத்திற்கான அதிகாரத்தை இந்த பத்து நாடுகளுக்கும் கொடுக்கும் அதிகாரம் ஐரோப்பிய யூனியனுக்கு தான் உண்டு என்று எடுத்துக்கொள்ளலாம்.

நாம் ஏற்கனவே பல முறை கணக்கிட்ட தீர்க்கதரிசன காலண்டரின் அடிப்படையில்

  • ஒருநாள்=ஒரு (எபிரேய) தீர்க்கதரிசன வருடம் = 360 நாட்கள்
  • ஒருநாள் ஒரு 360 நாட்களைக் கொண்ட ஒரு வருடம் என்றால் ஒரு மணி நேரம் என்பது = 15 தீர்க்கதரிசன நாட்கள்

இந்த பத்து ராஜாக்கள் அல்லது தேசங்களும் ஒரு மணிநேரம் அல்லது 15 நாட்கள் ராஜாக்களைப் போல ஆளுகை செய்யும் அதிகாரத்தை மிருகமாகிய ஐரோப்பிய யூனியனிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். எதற்கு என்று அடுத்து பார்க்க இருக்கிறோம்.

பரஸ்பர அதிகாரப் பகிர்வு

ஐரோப்பிய கூட்டமைப்பு என்பது பல ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரே அரசாங்கம் போன்ற அமைப்பை உருவாக்கி, தாங்களே தங்களுக்குள் நிர்வகித்துக் கொள்ளும் அமைப்பாகும். இவர்கள் ‘Governs without Government’ அல்லது அரசாங்கம் இல்லாமல் ஆளுகை செயதல் என்ற கொள்கையை உடையவர்கள் என்று தங்களை சொல்லிக்கொண்டாலும், தங்களுக்கென்று தனி பாராளுமன்றம் மற்றும் உறுப்பினர் குழுவை அமைத்து தான் இதை நிர்வகிக்கின்றனர். இதின் உறுப்பினர் நாடுகள் தான் தலைகள் அல்லது ராஜாக்கள்; எட்டாவது மிருகம் தான் இவர்களை சுமக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு என்ற ‘ராஜ்ஜியம்’. இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு பலம் சேர்க்கின்றனர்; அதே சமயம் இந்த ‘ஒற்றை அரசாங்கம் அல்லது ராஜ்ஜியம்’ தான் இந்த உறுப்பினர் நாடுகளுக்கு பல முடிவுகளையும், அதிகாரங்களையும் தீர்மானிக்கும் நடுவராக செயல்பட்டு வருகிறது.

‘‘நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள். இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.’’ (வெளி 17:12,13)

இந்த பத்து ராஜாக்களும், மிருகத்துடனே கூட (Along with the beast) ராஜாக்கள் போல நடந்துகொள்வதற்கு அதிகாரம் பெற்றுக்கொள்வார்களாம். இந்த வசனம் சொல்லப்பட்டது யுத்தங்கள் சம்பந்தப்பட்டது என்பதால், இவர்கள் ராஜாக்கள் போல நடந்துகொண்டது யுத்தத்தில் ஈடுபடுவதற்காகத் தான் என்று நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். இந்த பத்து ராஜாக்கள் தங்கள் ராணுவ வல்லமையையும், அரசாங்க அதிகாரத்தையும் மிருகமாகிய ஐரோப்பிய கூட்டமைப்புக்குக் கொடுப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் பரஸ்பரம் தங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து செயல்படுபவர்கள் என்று தெளிவாகின்றது.

எப்படி சாத்தியம்?

ஒரே நாட்டிற்குள் இருக்கும் பல மாநிலங்களையே ஒருங்கிணைத்துச் செல்வதில் இருக்கும் பிரச்சனைகளை இந்தியர்களாகிய நாம் தினமும் கண்கூடாகக் கண்டுவருகிறோம். அப்படியானால், பல நாடுகள் சேர்ந்து ஒரு பொது அமைப்பை நிறுவி, பொது பொருளாதாரக் கொள்கை, போக்குவரத்து, பணப்பரிமாற்றம், மற்றும் ராணுவ பலத்தை எப்படி நிர்வகிக்க முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு பதிலை இயேசு யோவானுக்குப் பின்வருமாறு கூறியுள்ளார்.

‘‘நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப்பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள். தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.’’ (வெளி 17:16,17)

இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள் என்று ஏற்கனவே 13 ஆம் வசனத்திலே பார்த்தோம். இந்த ஒரே யோசனை (One purpose / common policy) அவர்களாக ஏற்படுத்திக்கொண்டது கிடையாது. தேவனாலே இந்த யோசனை நான்கு காரியங்களுக்காக அவர்கள் இருதயங்களிலே ஏவப்பட்டதாம்.

  1. தேவனின் யோசனைகள் நிறைவேற
  2. தேவனின் தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேற
  3. வேசி ஸ்திரீயாகிய ரோமன் கத்தோலிக்க தலைமையைப் பகைத்து, அதை அழிக்க
  4. இயேசுவோடு யுத்தம் செய்து இந்த ராஜாக்களும், மிருகமும் அழிந்து மடிய

ஒட்டாத ராஜ்ஜியங்களை ஒருங்கிணைத்த கடைசி மிருகம்

இரும்பும் களிமண்ணும் எவ்வாறு ஒன்றோடொன்று கலவாமல் இருக்குமோ, அப்படியே இந்த ஐரோப்பிய ராஜ்ஜியங்கள் (தற்கால ஐரோப்பிய நாடுகள் வரை) முடிவுகாலத்தில் இயேசுவின் வருகை வரை அரசியல் ரீதியாக ஒருங்கிணைய வாய்ப்பில்லை என்பதே தானியேலின் தீர்க்கதரிசனத்தின் சாராம்சம். இவ்வாறு சிதறிய ராஜ்ஜியத்தை கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையில் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது தான் ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியமாகும். அதன் வீழ்ச்சிக்குப் பின்பு (கி.பி 1798) இந்த ஐரோப்பிய நாடுகளை பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரேக்கம் போல் ஒரே ஆளுகைக்குள் கொண்டுவர முயற்சி செய்த நெப்போலியன், அடால்ஃப் ஹிட்லர் போன்றோரின் முயற்சிகள் தோல்வியடைந்தன. அதற்குக் காரணம் அவர்களது போர் யுக்திகள் தோல்வியடைந்தது அல்ல. எவரின் கண்களுக்கும் தெரியாத கர்த்தரின் கரமே அந்த முயற்சியைத் தடுத்து தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியது. ஆனால் வெளிப்படுத்தலில் யோவான் கண்ட தரிசனத்தின்படி, கடைசி மிருகமான ஐரோப்பிய யூனியன் என்ற வடிவத்தில் அவை மீண்டும் குறுகிய காலங்களுக்கு மட்டும் ஒருங்கிணைந்து, இயேசுவின் வருகையின்போது அவரை எதிர்த்து நிற்கும் பத்து கொம்புகளாக எழும்பும் என்று அறிகின்றோம். இதனடிப்படையில் பார்த்தால் அந்த காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

எதற்காக இந்த அதிகாரம்?

இவைகள் கடைசி யுத்தத்தில் ஈடுபடுவதற்கே இந்த ஆளுகை அதிகாரத்தைப் பெறுகின்றன. இந்தக் கடைசி யுத்தம் இரண்டு யுத்தங்களாக நடக்கலாம்; அல்லது ஒரே யுத்தம் இரண்டு பாகமாக நடக்கலாம். இதைத்தான் அடுத்த வசனங்கள் சொல்கின்றன. நாம் மேலே பார்த்த 12 ஆம் வசனத்திற்கு அடுத்த வசனங்கள் இரண்டு வகையான யுத்தங்களை சொல்கின்றன. அவற்றோடு சேர்த்து மொத்தம் எத்தனை வகையான முடிவுகால யுத்தங்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதை ஆராய்வோம்.

கடைசி யுத்தங்கள்

           ரோம ராஜ்ஜியமான ஐரோப்பிய கண்டத்தில் வெளிப்படுத்தலின் எக்காளங்கள், வாதைகள் பல காலக்கட்டங்களில் யுத்தங்களாகவும், அழிவின் சம்பவங்களாகவும் நிறைவேறியதைப் பார்த்தோம். ஆனால் கடைசி மிருகம் அல்லது கடைசி ராஜ்ஜியம் மற்றும் பூமியின் ராஜாக்கள் ஒன்று திரண்டு இயேசுவை எதிர்த்து நின்று அழிவை சந்திக்கும் ‘கடைசி யுத்தம்’ நான்கு இடங்களின் கொடுக்கப்பட்டுள்ளது. இவை இனி வரும் காலங்களில் நடக்க இருப்பவை. அவை எல்லாம் வெவ்வேறு யுத்தங்களா அல்லது ஒரே கடைசி யுத்தத்தின் சம்பவங்களா? என்று பார்ப்போம்.

  1. எருசலேமுக்கு விரோதமான யுத்தம்

தீர்க்கதரிசன புத்தகங்கள் எருசலேமுக்கு விரோதமான இரண்டு யுத்தங்களைப் பற்றிக் கூறுகின்றன

1.1 இயேசுவின் வருகைக்கு முன் நடக்கும் கோகு, மாகோகு யுத்தம்

கோகு, மாகோகு யுத்தம் இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கவிருப்பதாக வேதம் சொல்கிறது.

இஸ்ரவேலர் உலகத்தின் எல்லா தேசங்களிலுமிருந்து கூட்டப்பட்டு சுகமாய் தங்கியிருக்கும்போது கீழ்க்காணும் தேசங்கள் எருசலேமைத் தாக்கும் என்று எசேக்கியேல் (38 & 39 ஆம் அதிகாரங்கள்) கூறுகிறார்.

  • ரோஷ்- தற்கால ரஷ்யா
  • மாகோகு- தெற்கு ரஷ்யா மற்றும் உக்கிரைன் எல்லையின் அருகிலுள்ள ரஷ்ய பகுதி
  • மேசேக்கு& தூபால் -தற்கால துருக்கி
  • கோமேர்-தற்கால மேற்கு மத்திய துருக்கி
  • தோகர்மா- துருக்கியின் மற்றொரு பகுதி
  • பெர்சியா- ஈரான்
  • எத்தியோப்பியா – எத்தியோப்பியா மற்றும் சூடான்
  • லிபியா

சுருக்கமாக ரஷ்யாவுடன், இஸ்லாமிய அரசாட்சியையுடைய மேற்கண்ட நாடுகள் சேர்ந்து படையெடுக்கும் என்று வேதவரலாற்று அறிஞர்கள் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கூறுகின்றனர். இது நிச்சயமாக தற்கால நவீன இஸ்ரவேல் மீது நிகழப்போகும் யுத்தமாகும்.

‘‘அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ (மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகு தேசத்தானான கோகு) விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் (நவீன இஸ்ரவேல்) கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்;’’ (எசேக்கியேல் 38:8)

இதன் முடிவிலும் இயேசுவே இஸ்ரவேலுக்குத் துணைநின்று அவர்களை அழிப்பார் என்றும் அதில் அழிக்கப்படும் எதிரி வீரர்களின் உடல்களை யூதர்கள் புதைத்து முடிக்க ஏழு மாதங்கள் ஆகும் என்றும் எசேக்கியேல் கூறுகின்றார். அந்த யுத்தத்தின் போது பயன்படுத்தப்படும் இராணுவ தளவாடங்கள், வெடிமருந்துகள், எரிசக்திப்பொருட்களை இஸ்ரவேலர் ஏழு வருடகாலமட்டும் எரிப்பதற்குப் பயன்படுத்துவார்கள் என்றும் கூறுகிறார்.

‘‘இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும் வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள். இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதம் செல்லும்’’ (எசேக்கியேல் 39:9&12)

அப்படியானால் இந்த யுத்தத்தின் முடிவில் ஒரு முக்கிய சம்பவம் நிகழலாம். இந்த யுத்தங்களை சகரியா, தானியேல் மற்றும் எசேக்கியேல் எழுதிவைத்துள்ள முடிவுகால யுத்தங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் எளிதில் புரியும். இதைப்பற்றி சகரியா கூறும்போது, அந்நாளிலே

  • எருசலேம் சுற்றிலும் உள்ள மற்ற தேசங்களுக்கு போதை மயக்கத்தை ஏற்படுத்தி தள்ளாடப்பண்ணும் அளவிற்கு வலிமையாக, முற்றிகையிடப்பட முடியாத அளவிற்கு இருக்கும். (சகரியா 12:2)
  • எருசலேம் அசைக்க முடியாத பாறையைப் போல ஸ்திரமாக இருக்கும். அதை அசைக்க முயற்சி செய்கிறவன் தன்னைத் தான் காயப்படுத்திக்கொள்வான். (12:3)
  • எருசலேமிற்கு எதிராக வருபவர்களின் படைகளுக்கு குருட்டாட்டத்தை கர்த்தர் உண்டுபண்ணுவார். எருசலேமின் குடிகள் சமாதானமாய் குடியிருந்து, (கி.பி 1948 க்கு பின்) சுற்றிலும் உள்ள தேசங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள். (12:4-6)
  • அந்தகாலக்கட்டத்திலிருந்து கர்த்தர் எருசலேமின் எதிரிகளை அழிக்க ஆரம்பிப்பார் (I will begin to destroy all nations that come against Jerusalem-12:9). இந்த யுத்தத்தின் முடிவில் தான் இஸ்ரவேல் இயேசுவே மேசியா என்பதை ஏற்றுக்கொள்ளும். ‘‘நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.’’ (சகரியா 12:10)
  • அப்படிஇஸ்ரவேலர் மனம்திரும்பி அழுது புலம்பும் புலம்பல், யூதா மக்களாலும், கர்த்தராலும் மிகவும் நேசிக்கப்பட்ட யூதா ராஜாவாகிய யோசியா, பார்வோன் நேகோவால் ‘மெகிதோவில்’ நடந்த யுத்தத்தில் கொல்லப்பட்டபோது யூதாவில் ஏற்பட்ட புலம்பலுக்கு ஒப்பாக இருக்கும். (12:11)
  • அந்தகாலக்கட்டத்தில் இஸ்ரவேலர் இரட்சிப்படைய (ஏழு வருடங்கள்) வாய்ப்பு கொடுக்கப்படும். (சகரியா 13:1)
  • பொய்யாய் தீர்க்கதரிசனம் உரைக்கிறவர்கள் தேசத்தில் இருப்பதில்லை. (13:2-6)

இஸ்ரவேலரில் மீதியானவர்களின் இரட்சிப்பு

இந்த யுத்தத்தில் இயேசுவின் வல்லமையை யூதர்கள் காண்பார்கள். அடுத்த ஏழு வருடகாலத்திற்குள் மீதியான இஸ்ரவேலர் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதே அந்த முக்கிய சம்பவம்.

‘‘இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும், அவர்கள்மேல்நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளும் காண்பார்கள். அன்றுமுதல் என்றும் நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று இஸ்ரவேல் வம்சத்தார் அறிந்துகொள்வார்கள். நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.’’ (எசேக்கியேல் 39:22,23,29)

இப்படி கர்த்தரின் ஆவி ஊற்றப்பட்டபடியால் சகரியா சொன்னபடி ஒரு பெரிய இரட்சிப்பு இஸ்ரவேலருக்கு வரும்.

‘‘அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன். நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.’’ (சகரியா 12:9,10)

இந்த யுத்தம் முடிவடைந்த பின்னர் வரும் ஏழுவருடங்கள், இஸ்ரவேலர் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டு இரட்சிப்படையும் காலமே தவிர, அந்திக்கிறிஸ்துவின் உபத்திரவத்தால் இஸ்ரவேலர் உபத்திரவமடைந்து இயேசுவை ஏற்றுக்கொள்ளும் காலங்கள் அல்ல. ஏனென்றால் உபத்திரவகாலம் என்பது யூதர்களுக்கானது அல்ல; இயேசுவை ஏற்றுக்கொண்ட சபையாகிய யூதர்கள் மற்றும் புறஜாதி கிறிஸ்தவர்களுக்கானது என்று முந்தைய அத்தியாயங்கள் மூலமாக கற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன். யூதர்களானாலும் சரி, புறஜாதியாரானாலும் சரி, ஒரே வாய்ப்பு தான் கொடுக்கப்படும். புறஜாதி கிறிஸ்தவர்களை இரகசியமாகவும், உபத்திரவத்தால் மனம்திரும்பும் யூதர்கள் மற்றும் கைவிடப்பட்ட மற்ற கிறிஸ்தவர்களை பகிரங்கவருகையிலும் எடுத்துக்கொள்ளும் அளவிற்கு இயேசுகிறிஸ்து பட்சபாதமுள்ளவர் அல்ல; இரண்டாம் வாய்ப்பைப் பற்றி எந்த தீர்க்கதரிசனங்களும், உவமைகளும் சொல்லவில்லை. தானியேலின் எழுபதாவது வாரம் இன்னும் நிறைவேறவில்லை என்று நம்புவதால் வந்த விளைவே இது.

1.2 தானியேலில் சொல்லப்பட்ட முடிவுகால யுத்தம்

தானியேல் 11 ஆம் அதிகாரத்தில் கிரேக்க ராஜ்ஜியத்தில் ஆரம்பித்து, அண்டியோகஸ் எபிபேனசைப் பற்றி விவரித்துவிட்டு, ரோமன் கத்தோலிக்க தலைவர்களான போப்புகளின் செயல்களை விவரித்துவிட்டு, இன்னொரு முக்கிய முடிவுகால யுத்தத்தை சொல்லிவைத்திருக்கிறார். தானியேல் 11:40-45 ல் சொல்லப்பட்டுள்ள யுத்தம் தான் நான் ஆராய்ந்து பார்த்தவரை வேத அறிஞர்களால் இன்னும் ஒரு சரியான விளக்கம் சொல்லமுடியாத யுத்தம். எனவே வேத வசனங்களின் அடிப்படையில் ஆவியானவரின் உதவியோடு முடிந்த அளவுக்கு இதை விளக்க முயற்சி செய்திருக்கிறேன்.

‘‘முடிவுகாலத்திலோவென்றால், தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்; வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்துபோவான்’’ (தானியேல் 11:40)

இந்த யுத்தம் முடிவுகாலமாகிய இயேசுவின் இரண்டாம் வருகையின் காலத்தில் நடைபெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இதில் சொல்லப்பட்டுள்ள வடதிசை ராஜாவும், எசேக்கியேல் சொல்லியுள்ள வடதிசை ராஜாக்களான ராஜ்ஜியங்களும் ஒன்றாக இருக்கலாம்.

‘‘அப்பொழுது நீயும் (தலைவனான கோகு) உன்னுடனேகூடத் திரளான ஜனங்களும் வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து, எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாயிருப்பார்கள்.’’ (எசேக்கியேல் 38:15)

இந்த வடதிசை ராஜ்ஜியங்களைப் பற்றி ஏற்கனவே மேலே சொல்லியிருக்கிறேன். தானியேலில் சொல்லப்பட்டுள்ள வடதிசை ராஜ்ஜியங்களும், தென்திசை ராஜ்ஜியங்களும் ‘ரோமை’ மையமாகக் கொண்ட ஐரோப்பாவிற்கு எதிராக யுத்தம் செய்யவரலாம். அதில் வடதிசை ராஜ்ஜியங்கள் இஸ்ரவேல் தேசத்தின் மீதும் படையெடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ள இந்த சம்பவம் கோகு, மாகோகு யுத்தமாக இருக்கலாம்.

‘‘அவன் (வடதிசை ராஜா) சிங்காரமான தேசத்திலும் (இஸ்ரவேல்) வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் புத்திரரில் பிரதானமானவர்களும், அவன் கைக்குத் தப்பிப்போவார்கள்.’’ (தானியேல் 11:4)

இந்த வடதிசை ராஜ்ஜியங்களுடன் லீபியரும், எத்தியோப்பியரும் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதே தேசங்கள் தான் கோகு, மாகோகு யுத்தத்திலும் வடதிசை ராஜ்ஜியங்களுடன் கூட்டணி சேரும் என்று எசேக்கியேலும் சொல்லிவைத்திருக்கிறார்

‘‘லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்குப் பின்செல்லுவார்கள்.’’ (தானியேல் 11:43)

‘‘அவர்களோடேகூட பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள்.’’ (எசேக்கியேல் 38:5)

மேலும் இந்த யுத்தத்தில் வடதிசை ராஜாக்கள் இஸ்ரவேல் தேசத்தில் தான் அழிவை சந்திப்பார்கள் என்றும் இரண்டு தீர்க்கதரிசிகளும் கூறியுள்ளனர்.

‘‘சமுத்திரங்களுக்கு (மத்தியதரைக்கடல்) இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே (சீயோன்) தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.’’ (தானியேல் 11:45)

‘‘நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்;’’ (எசேக்கியேல் 39:4)

சுருக்கமாக ரஷ்யாவுடன் இஸ்லாமிய நாடுகள் கூட்டணி சேர்ந்து இஸ்ரவேல் மீது தாக்கும். அதன் முடிவில் இந்தக்கூட்டணி இயேசுவால் வீழ்த்தப்பட்டதை இஸ்ரவேலர் காணும்போது இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் தோமாவைப்போல் ‘கண்டு விசுவாசிக்கும்’ கூட்டத்தினரே.

‘‘இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும், அவர்கள்மேல்நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளும் காண்பார்கள். அன்றுமுதல் என்றும் நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று இஸ்ரவேல் வம்சத்தார் அறிந்துகொள்வார்கள்.’’ (எசேக்கியேல் 39:21,22)

(குறிப்பு : நான் இந்தப் பகுதிகளை எழுதி முடிக்கும் வரை ரஷ்ய – உக்கிரைன் யுத்தத்தின் அறிகுறிகளைக்கூட கேள்விப்படவில்லை. இந்தப் புத்தகத்தை அச்சிட அனுப்புவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் போர் ஆரம்பித்தது. இதில் ரஷ்யா இஸ்ரவேலை தாக்கும் பட்சத்தில் இந்த யுத்தம் கோகு – மாகோகு – இஸ்ரவேல் யுத்தமாக மாறலாம்)

1.3 இயேசுவின் வருகைக்கு சற்றுமுன் எருசலேமில் யுத்தம்

இந்த ஏழு வருடங்களின் முடிவில் மீண்டும் ஒரு யுத்தம் எருசலேமை மையமாகக்கொண்டு நடக்கும் என்று சகரியா காண்கிறார். இந்த யுத்தம் பூமியின் சகல ஜாதிகளும் சம்பந்தப்படும் மூன்றாம் உலகப்போராக இருக்கலாம். அந்த யுத்தத்தின் முடிவில் தான் இயேசுவின் பாதங்கள் ஒலிவமலையின்மேல் நிற்கும். அதாவது அவரது பகிரங்க வருகை இருக்கும்.

கடைசி யுத்தங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்தப்பகுதியில், வெளிப்படுத்தலை விட்டு வெளியேபோய் இன்னொரு யுத்தத்தைப் பற்றி நாம் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும். அது தான் சகரியா தீர்க்கதரிசன புத்தகத்தின்

  • ஆம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசன சம்பவங்களாகும். இதை முழுவதும் சொல்ல இடமில்லாததால் அதன் சாராம்சங்களையும், சம்பவங்களையும் குறிக்கும் வசனங்களை உங்களுக்குப் புரியும் வகையில் வரிசைப்படுத்தியுள்ளேன். இந்த யுத்தத்தைப் பற்றி 14 ஆம் அதிகாரத்தில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பல தீர்க்கதரிசனங்களில் பல ராஜ்ஜியங்களின் அழிவைக்குறிக்கும் காலங்கள் ‘கர்த்தருடைய நாள்’ என்று கூறப்பட்டுள்ளதுபோல, எருசலேமின் மீது நடக்கவிருக்கும் கடைசி யுத்தமும் ‘கர்த்தருடைய நாள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் நடக்கும் ஒரு மிக முக்கிய சம்பவம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது (சகரியா 14:2-5). கர்த்தருடைய நாளிலே………
  • எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. (முந்தைய யுத்தத்தில் குறிப்பிட்ட சில ராஜ்ஜியங்கள் படையெடுத்தன; இதில் சகல தேசங்களும் வரும் என்று தெரிகிறது)
  • கர்த்தர்புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.
  • அந்நாளிலே (யுத்தமுடிவிலே) அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
  • அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர்வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.

எனவே இந்த எருசலேமுக்கு விரோதமான யுத்தம் முடியும் காலத்தில் இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இதில் எந்த இடங்களிலும் இரகசியமாக வருவார் என்று சொல்லப்படவில்லை.

எனவே இந்த யுத்தமும் கடைசி யுத்தங்களில் ஒரு பகுதியாகத் தான் இருக்கமுடியும். ஏற்கனவே மேலே சொன்னதுபோல, கோகு, மாகோகு மற்றும் இஸ்ரவேலுக்கு இடையிலான யுத்தத்தின் முடிவில் ஏழு வருடங்கள் இடைவெளி இருக்கும் என்று பார்த்தோம். அதன் முடிவில் மீண்டும் உலகமகா யுத்தம் வரும்; அப்போது எருசலேம் மீண்டும் யுத்தத்தை சந்திக்கும்; அதன் இறுதியில் இயேசு ஒலிவமலையின் மேல் நிற்பார் என்று அவரது இரண்டாம் வருகையைக் குறித்து சொல்லப்பட்டதை சகரியா தீர்க்கதரிசன புத்தகம் மூலமாக அறிந்துகொண்டோம். இதே சம்பவம் தானியேல் 12 ஆம் அதிகாரத்தின் முதல் வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வசனங்களின்படி எருசலேம் ஒரு பெரும் முற்றிகைக்கு உள்ளாகும்; ஆனாலும் கர்த்தர் தமது யுத்த தூதனான மிகாவேலை எழும்பப்பண்ணுவார்; அதன் இறுதியில் உயிர்த்தெழுதல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த சமயத்தில் இயேசுவின் பகிரங்கவருகை நடந்தேற வேண்டும்.

‘‘உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே (எருசலேமின் கடைசி யுத்தத்தின்போது) எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.’’ (தானியேல் 12:1,2)

  1. ஸ்திரீ/மகா நகரம்/மகா பாபிலோன் அழிக்கப்படும் யுத்தம்

இந்த யுத்தம், மூன்றாம் உலகப்போராக இருக்கலாம். மேலே சொன்ன ஆதாரங்களின்படி மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்து 15 நாட்களிலேயே முடிவடைந்து விடும் என்று விசுவாசிக்கிறேன். ஏனென்றால் இந்த ஐரோப்பிய நாடுகள் 15 நாட்கள் அதிகாரம் பெற்றன என்று பார்த்தோம். தற்போது உலக நாடுகளிடம் இருக்கும் அணு ஆயுதங்களைக் கணக்கில் கொண்டால் 15 நாட்களே அதிகம் என்று தோன்றும் அளவிற்கு அதிபயங்கரமானவை. இந்த யுத்தத்தின்போது முதலில் என்ன நடக்கும் என்று யோவானுக்கு தூதன் தனி விளக்கமாக சொல்கிறார். ‘பின்னும் அவன் (தூதன்) என்னை நோக்கி’ என்று ஆரம்பித்ததன் மூலம் இதைக் கண்டு கொள்ளலாம்.

‘‘பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம். நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப்பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.’’ (வெளி 17:15,16)

இந்த பத்து தேசங்களும், ஐரோப்பிய யூனியன் என்ற மிருகத்திடம் அதிகாரம் பெற்றதற்கு என்ன முக்கியக் காரணம் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று விசுவாசிக்கிறேன். ஆம், இவர்கள் எல்லோரும் சேர்ந்து இதுவரை சகல ஜாதிகளையும், பாஷைக்காரர்களையும் வஞ்சித்துவந்த வேசியாகிய ‘கத்தோலிக்க சபை அல்லது வாடிகன்’ மீது நான்கு காரியங்களை நிகழ்த்துவார்கள்.

  1. அதுவரைத் தோழமையாக இருந்த, ஆலோசனை சொல்லிவந்த சபையை/ வாடிகனை பகைப்பார்கள்.
  2. அதைப் பாழும் நிர்வாணமாக்குவார்கள்: தேவனுக்கு விரோதமான விக்கிரக ஆராதனையாகிய வேசித்தனத்தை செய்த யூதா, இஸ்ரவேல் வம்சங்களின் அழிவைப் பற்றி தேவனாகிய கர்த்தர் கூறிய எசேக்கியேல் 16:35-42 மற்றும் 23:22-30 வரையிலான வசனங்களை வாசித்துப் பாருங்கள். அதில் ‘உன் வஸ்திரங்களை உரிந்து, சிங்காரமான ஆபரணங்களை பறித்து, நிர்வாணமாக்கி’ என்று சொல்லப்பட்டிருக்கும். இதன்படிப் பார்த்தால் இந்த வாடிகனின் செல்வமும், பகட்டும் உரியப்பட்டு நிர்வாணமாக்கப்படும்.
  3. மாம்சத்தைப் பட்சித்து: மிருகம் என்றால் ராஜ்ஜியம் என்று பொருள்படும்போது, மாம்சம் என்பது அதன் புவியியல் அமைப்பு என்று பொருள்படும். இதன்படி இந்த பத்து தேசங்கள் வாடிகனின் எல்லைகளை அழிப்பார்கள்.
  4. நெருப்பினால் சுட்டெரிப்பது என்பது ஒன்றும் மீதம் இல்லாமல் நிர்மூலமாக்கப்படுவதற்கு அடையாளமாகும். மொத்தத்தில் இந்த யுத்த காலத்தில் ரோமின் வாடிகன் (மகா நகரம்) மற்றும் அதன் சபை அதிகாரம் (ஸ்திரீ) முற்றிலுமாக அழிக்கப்படலாம். இந்த அழிவு, தேவன் பரிசுத்தவான்களின் இரத்தத்திற்காக வாங்கும் கடைசிப் பழி. ஏனென்றால் இந்த ஸ்திரீ தான், அவள் அழிவதற்கு முன்வரை பூமியின் ராஜாக்கள் மீது ராஜ்யபாரம் பண்ணுகிற ‘மகா நகரம்’ ஆகும்.

‘‘நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்’’ (வெளி 17:18)

மகா பாபிலோன் எப்படி அழிந்தது என்பதைத்தான் வெளிப்படுத்தல் 18 ஆம் அதிகாரம் முழுவதுமாக சொல்கிறது. மேலும் இனி மகா பாபிலோன் இருக்காது. இயேசுவின் ராஜ்ஜியம் தான் ஸ்தாபிக்கப்படும் என்று தூதன் சொல்வதையும் பார்க்கிறோம்.

‘‘அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.’’ (வெளி 18:21)

மேலும் தீர்க்கதரிசிகள், பரிசுத்தவான்கள் மட்டுமல்லாது பூமியில் பல கோடி பேரைக் கொன்று குவித்த காரணத்திற்காகத் தான் அது அழிக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

‘‘தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.’’ (வெளி 18:24)

இந்த வசனங்கள் மீண்டும் ஒரு விசயத்தைத் தெளிவாக்குகிறது. அது என்னவென்றால்   

  • மகாநகரம் – ரோம்/ வாடிகன்
  • மகாவேசி- கத்தோலிக்க சபை
  • மகாபாபிலோன் – ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியத்தின் ஆளுகை
  • 8ஆம்மிருகம்- ரோமின் கடைசி சாம்ராஜ்ஜியமான ஐரோப்பிய கூட்டமைப்பு
  1. மிருகம் அழிக்கப்படும் யுத்தம்

நான் ஏற்கனவே சொன்னது போல இந்த யுத்தம், மேலே பார்த்த கத்தோலிக்க சபையும், வாடிகனும் அழிக்கப்பட்ட முதல் யுத்தத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம். இதில் ஈடுபடும் யுத்த அணிகள் மேலே சொன்ன யுத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளதால் தனியாகக் கொடுத்துள்ளேன்.

‘‘இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் (10 ராஜாக்கள்) தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள். இவர்கள் (10 ராஜாக்கள்+மிருகம்) ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதிகர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.’’ (வெளி 17:13,14)

யுத்த அணி 1: ஆட்டுக்குட்டியானவரான இயேசு

யுத்த அணி 2: பத்து ராஜாக்களின் ராணுவ வல்லமையையும், ராஜ்ஜிய அதிகாரத்தையும் பெற்ற மிருகமாகிய ஐரோப்பிய கூட்டமைப்பு.

வெற்றி பெறுபவர்: கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமான இயேசு.

இந்த யுத்தம் பற்றிய கூடுதல் விபரங்கள் வெளிப்படுத்தல் 19:17-21 ல் கூறப்பட்டுள்ளது.

மகா தேவனின் விருந்து

வேசி ஸ்திரீயாகிய கத்தோலிக்க சபையின் ஆளுகையை அழிக்கப்போவது ஐரோப்பிய கூட்டமைப்பு என்பதையும், அந்த ஐரோப்பிய கூட்டமைப்பு மற்ற உலக நாடுகளோடு இயேசுவை எதிர்த்து யுத்தத்திற்கு வரும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த ஐரோப்பிய கண்டமும், அதற்கு ஒத்துழைக்கும் பூமியின் ராஜாக்களும் அழிக்கப்படும் சம்பவங்களைத் தான் வெளிப்படுத்தல் 19 ஆம் அதிகாரம், வரிசைப்படி கொடுத்துள்ளது. அதில் சில முக்கிய சம்பவங்களை மட்டும், காலவரிசையை சரியாகப் புரிந்துகொள்ளும் நோக்கத்தில் கொடுத்துள்ளேன்.

  • ’மகாநகரம், மகா வேசி, மகா பாபிலோன்’ ஆகிய மூன்று பெயர்களை உடைய ரோமன் கத்தோலிக்க ராஜ்ஜியம், எட்டாவது மிருகமாகிய ஐரோப்பிய கூட்டமைப்பால் வீழ்த்தப்பட்டதைக் கண்டு பரலோகத்தில் கொண்டாட்டம் நடக்கிறது. ‘‘தன் வேசித்தனத்தினால் பூமியைக்கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.’’ (வெளி 19:2,3)
  • இந்தகாலகட்டத்தில் மணவாட்டி சபை இயேசுவை சந்திக்க ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.’’நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.’’ (வெளி 19:7)
  • இயேசுகிறிஸ்து வானத்தில் ராஜாவாக, மீட்பராக வெளிப்படும் சம்பவம் ஒரே ஒரு முறை மட்டுமே நடக்கும் சம்பவமாக வேதத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. வெள்ளைக் குதிரையில் ஏறி இயேசு யுத்தம் செய்ய செல்லும் சம்பவம் அடுத்து வருகிறது. எனவே, இந்தக் காலக்கட்டம் கூட இயேசு தனது பரிவாரங்களோடு வானத்தில் வெளிப்பட்டு இறங்கிவரும் ‘இரண்டாம் வருகையின்’ காலமாக இருக்கலாம்.
  • இயேசுவும், பரலோகத்தின் சேனைகளும் மிருகத்தை எதிர்த்து யுத்தம் செய்யப் புறப்படுகிறார்கள்.

‘‘பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். ‘‘ (வெளி 19:11)

‘‘பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்’’ (வெளி 19:14)

  • ஒருதூதன், மிகப்பெரும் அழிவைத் தரும் யுத்தம் ஒன்று நடக்கப்போவதாகவும், அதில் பூமியின் ராஜாக்கள், பலவான்கள் நிச்சயமாக அழிக்கப்படுவார்கள் எனவும், அவர்களது மாம்சத்தை சாப்பிட வருமாறு ஆகாயத்து பறவைகளை அழைக்கிறான். இதைத்தான் அவன் ‘மகா தேவன் கொடுக்கும் விருந்து’ என்றும் அழைக்கிறான்.

‘‘பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்’’ (வெளி 19:17,18)

  • அடுத்துமிருகமாகிய ஐரோப்பிய கூட்டமைப்பின் அணியினருக்கும், இயேசுவின் சேனைக்கும் இடையே யுத்தம் நடக்கிறது. இந்த யுத்தம் நடக்கும்போது, மிருகத்தின் மேல் ஸ்திரீ இல்லை; ஏனென்றால் அவள் இந்த பத்து ராஜாக்களால் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டாள்.

‘‘பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.’’ (வெளி 19:19)

யுத்தத்தின் முடிவில் இரண்டு நபர்கள் (மிருகம், கள்ளதீர்க்கதரிசி) அழிவை சந்திக்கிறார்கள். மற்ற ராஜாக்களும் அவர்களது சேனைகளும் வேறுவிதமாய் அழிக்கப்படுவார்கள்.

‘‘அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்..’ (வெளி 19:20)

மிருகமாகிய எட்டாவது ராஜ்ஜியமும், பூமியின் குடிகளை கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினின்று விலக்கி மோசம்போக்கின கள்ளதீர்க்கதரிசியான பாப்பஸியின் தலைவர்களும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டு, மீண்டு வராதபடி நிரந்தர அழிவை சந்திப்பார்கள். நாம் இதுவரைப் பார்த்த முதல் ஆறு ராஜ்ஜியங்கள், அவற்றைத் தொடர்ந்து வந்த ராஜ்ஜியங்களால் மட்டுமே விலக்கப்பட்டது. ஆனால் கடைசி ராஜ்ஜியங்களான ரோமன் கத்தோலிக்க சாம்ராஜ்ஜியத்தின் வழிவந்த ஐரோப்பிய கூட்டமைப்பு, இயேசுவின் கையினால் அழிக்கப்பட்டு, அக்கினிக்கு இரையாக்கப்பட்டது. இதை தானியேல் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்துள்ளார்.

‘‘அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.’’ (தானியேல் 7:11,12)

மிருகத்தோடே கூட்டணிபோட்டு வந்த பூமியின் மற்ற ராஜாக்கள் இயேசுவின் வாயின் ‘வார்த்தையினாலே’ கொல்லப்பட்டு பறவைகளுக்கு விருந்தாவார்களாம்.

மற்றவர்கள்  குதிரையின்மேல்  ஏறினவருடைய  வாயிலிருந்து  புறப்படுகிற  பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.’’ (வெளி 19:21)

இதற்குப் பிறகு வரும் 20 ஆம் அதிகாரத்தில் சாத்தான் 1000 வருடங்கள் கட்டப்படுவது, உயிர்த்தெழுதல், ஆயிரம் வருட அரசாட்சி, 1000 வருடங்களுக்குப் பின் சாத்தான் மீண்டும் விடுதலை செய்யப்பட்டு இன்னொரு முடிவு யுத்தம் செய்ய வருவது, வெள்ளை சிங்காசன தீர்ப்பு போன்ற சம்பவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களைப் பற்றி நான் தனியாக இரண்டாம் பாகமாக வெளியிட முடிவுசெய்திருப்பதால் இங்கு விளக்கம் கொடுக்கவில்லை. எனவே இந்த கடைசி யுத்த காலத்தின் போது தான் இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கலாம் என்று விசுவாசிக்கிறேன்.

  • ஸ்திரீ(சபை) அழிக்கப்படுவது : 8 ஆவது மிருகமாகிய ஐரோப்பிய கூட்டமைப்பால்
  • 8ஆவதுமிருகம் அழிக்கப்படுவது : இயேசுவின் வருகையால்

3.ஆறாம் கலசத்தின் இறுதி மற்றும் ஏழாம் கலசத்தின் கால யுத்தம்

கலசங்களைப் பற்றிய அத்தியாயங்களில் இதைப் பற்றி சொல்லியுள்ளேன். இருந்தாலும் இந்த அத்தியாயத்தில் சுருக்கமாக எழுதியுள்ளேன். ஆறாம் கலசம் ஊற்றப்பட்டபோது ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்திருந்த ‘ஒட்டமான் பேரரசு’ வீழ்ச்சியை சந்தித்தது (கி.பி 1821-கி.பி 1917). இதில் பிசாசு மற்றும் அவனது கடைசி ராஜ்ஜியம் மற்றும் கள்ளத்தீர்க்கத்தரியான போப்புகளின் வாயிலிருந்து வந்த மூன்று அசுத்த ஆவிகளும், ஐரோப்பாவை துண்டாடும் மூன்று உலகப்போர்கள் என்று வாசித்திருப்பீர்கள். அவைகளில் இரண்டு நடந்து முடிந்துவிட்டன. மூன்றாவது தான் இனி நடக்கவிருப்பது என்பதைப் பின்வரும் வசனங்களை, அவை நடக்கவிருப்பதாக சொல்லப்பட்டுள்ள காலக்கட்டத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் புரியும். (வெளி 16:13,14)

. (வெளி 16:13,14)

“அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன். அவைகள்

அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது”.

இந்த அசுத்த ஆவிகள் அல்லது பிசாசின் ஆவிகளின் நோக்கம் பூமியிலுள்ள ராஜாக்களை எல்லாம் தேவனுடைய மகாநாளாகிய அழிவின் நாட்களில் நடக்கும் ‘உலக மகாயுத்தத்திற்கு’ கூட்டி சேர்க்கும் வல்லமை பெற்றவைகளாகும். இவை எல்லாம் ஒரு சில நாட்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் அல்ல. சென்ற நூற்றாண்டில் முடிந்த இரண்டு உலக மகாயுத்தங்களையும், இனி நடக்கவிருக்கும் மூன்றாம் உலக மகாயுத்தத்தையும் குறிக்கும் நெடுங்கால தரிசனங்களாகும். இந்த கடைசி யுத்தத்தின்போது தான் பிசாசு பூமியின் ராஜாக்களை அல்லது உலக நாடுகளை எல்லாம் ‘அர்மகெதோன்’ என்ற இடத்தில் கூட்டிச்சேர்ப்பான் என்றும், அந்த நேரத்தில் தான் மகா பாபிலோனாகிய ரோமின் வழிவந்த ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் கடைசி அழிவை சந்திக்கவிருப்பதாகவும் அடுத்த வசனங்கள் கூறுகின்றன.

‘‘அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான். ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று (ஐவ’ள னடிநே) என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது. சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை (3சன றடிசடன றயச/குiயேட றயச). அப்பொழுது மகா நகரம் (ரோமின் ஆளுகை) மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.’’ (வெளி 16:16-19)

அர்மகெதோன் யுத்தம்

வெளிப்படுத்தல் தீர்க்கதரிசன புத்தகம், எல்லா சம்பவங்களையும் சங்கேத மொழிகளில் சொல்லியிருக்கும்போது, அர்மகெதோன் யுத்தம் மட்டும் நேரடியாக ‘அர்மெகதோன்’ என்ற இடத்தைக் குறிப்பதாக நாம் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? ஏற்கனவே வெளிப்படுத்தலில் சங்கேத மொழிகளை நேரடி அர்த்தங்களாக வியாக்கியானம் செய்ததால் தான் பல உபதேசக்குழப்பங்களை நாம் சந்தித்துள்ளோம். யோவான் காலத்து யூதர்கள் மற்றும் சபைகளின் கண்ணோட்டத்தில் அர்மகெதோன் என்றால் என்ன? அதிலும் ‘எபிரேய பாஷையில்’ என்று சொல்வதன் மூலம் யூத வாசகர்களுக்கு சொல்லவரும் செய்தி என்ன? என்று நாம் புரிந்துகொண்டால் தான் இதன் மறைமுக அர்த்தத்தை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

வேத வசனங்களின் ஆதாரப்படி ‘மெகிதோன்’ என்பது இஸ்ரவேலின் கர்மேல் மலையின் அடிவாரத்தில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு திசை வரைப் பரவியிருக்கும் ஒரு ‘பள்ளத்தாக்கு’ பகுதியாகும். இந்தப் பகுதி, நியாயாதிபதிகள் மற்றும் ராஜாக்களின் புத்தகங்களில் பல இடங்களில் ‘மெகிதோ’ (ஆநபனைனடி) என்று சொல்லப்பட்டுள்ளது. எபிரேய மொழியின் ‘அர்-மெகிதோன்’ (ழயச-அநபனைனடி) என்று பிரித்தறியப்படும் இந்த வார்த்தையின் அர்/ழயச என்பதற்கு மலை அல்லது பர்வதம் என்று அர்த்தமாகும். அப்படியானால் அர்மகெதோன் என்பதற்கு ‘மெகிதோ பள்ளத்தாக்கின் அருகிலுள்ள மலைப்பாங்கான இடம்’ என்று அர்த்தமாகும். யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு என்று இன்னொரு பெயரையுடைய இந்த மெகிதோ பள்ளத்தாக்கின் எல்லைகளாவன:

  • தெற்கே-சமாரிய குன்றுகள்
  • தென்கிழக்கு – கில்போவா மலை
  • மேற்கே-கர்மேல் பர்வதம்
  • கிழக்கே-ஜோர்டான் நாடு

படம் 77: அர்மகெதோனின் எல்லைகள்

பழைய ஏற்பாட்டில் பயின்ற யூதர்களுக்கு ‘மெகிதோ’ என்றாலே ‘பெரும் யுத்தங்கள் நடக்கும் இடம்’ என்று உடனே நினைவிற்கு வந்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பகுதி தான் பல பெரிய யுத்தங்கள் நடைபெற்ற இடமாகும்.

அட்டவணை 31: அர்மகெதோனில் நடைபெற்ற பெரிய யுத்தங்கள்

மத்திய கிழக்கு, எகிப்து நாடுகளோடு, ஐரோப்பாவை இணைக்கும் பகுதியான இந்தப் பள்ளத்தாக்கை, பல காலக்கட்டங்களில் பூமியின் பல ராஜாக்கள் கைப்பற்ற வேண்டிய இடமாக (Strategic location) விரும்பி யுத்தம் செய்ததில் ஆச்சரியம் இல்லை. வேதத்தில் சொல்லப்படாத இன்னும் பல ‘தீர்மானிக்கும் யுத்தங்கள்’ இந்தப் பகுதியில் நடைபெற்றுள்ளதாக வரலாறும் கூறுகிறது. அப்படியானால், ‘கடைசி யுத்தம் நடைபெறும் களமான’ மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய கண்டங்களை ஆவிக்குரிய ‘மெகிதோவாக’ யோவான் சங்கேத மொழியில் சொல்லியிருப்பதில் என்ன தவறு இருக்கக்கூடும்?

மேலும் இந்த மெகிதோ பள்ளத்தாக்கின் மொத்த பரப்பளவே சுமார் 125 ஏக்கர்கள் தான். இது நம் ஊர் அரசியல்வாதிகள் வாங்கிப்போடும் இடங்களை விட மிகக்குறைவானது. ராஜாக்கள் காலங்களில் யுத்தகளங்களில் நேருக்கு நேர் நின்று போர் புரியும் பழக்கம் இருந்ததால் இந்த இடமும் அதை சுற்றி உள்ள மலை முகடுகளும் போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று இருந்த இடத்திலிருந்தே பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் இடத்தைத் துல்லியமாகத் தாக்கும் திறன்கொண்ட ஏவுகணைகளும், விமானங்களும் இருக்கும்போது இப்படிப்பட்ட ஒரு இடத்தில் உலக நாடுகள் கூடி யுத்தம் செய்வதென்பது எப்படி சாத்தியமாகும்? இதில் சில இலட்சம் வீரர்கள் நிற்கக்கூட இடமில்லை.

எனவே இந்த அர்மகெதோன் யுத்தம் என்பது உலக நாடுகளிடையே நடக்கவிருக்கும் மிகப்பெரும் முடிவுகால யுத்தங்களைக் குறிக்கும் சங்கேத மொழியே தவிர, அந்த இடத்தில் நேரடியாக நடக்கும் யுத்தம் அல்ல. இந்த ஏழாம் கலசத்தின் நாட்களில் நடக்கவிருக்கும் சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே கலசங்களைப் பற்றிய அத்தியாயத்தில் விளக்கியிருந்தேன். இந்த யுத்தம் இதுவரை உலகம் காணாத பேரழிவுகளை ஏற்படுத்தும் கடைசி யுத்தம் என்பதற்கான ஆதாரங்களை யோவான் கொடுத்துள்ளார். (வெளி 16:18-21)

  • பூமிமிகவும் அதிர்ந்தது: பூமி அதிர்ச்சி என்பது யுத்தத்தின் சங்கேத மொழியாகும்.
  • பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய (யுத்தம்) அதிர்ச்சியுண்டானதில்லை.
  • அப்பொழுது மகா நகரம் (ஐரோப்பா) மூன்று பங்காகப் பிரிக்கப்பட்து (அழிவை சந்தித்தது).
  • புறஜாதிகளுடைய பட்டணங்கள் (மற்ற கண்டங்களிலுள்ள நாடுகள்) விழுந்தன.
  • மகாபாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.
  • தீவுகள்(சிறு நாடுகள்) யாவும் அகன்றுபோயின, பர்வதங்கள் (ராஜ்ஜியங்கள்) காணப்படாமற்போயின.
  • தாலந்து நிறையான பெரிய கல்மழையும் (குண்டுகள்/ பயங்கர ஆயுதத் தாக்குதல்கள்) வானத்திலிருந்துமனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்தவாதை மகா கொடியதாயிருந்தது.
  1. ஆயிரவருட அரசாட்சிக்குப் பின்வரும் கோகு, மாகோகு யுத்தம்

வெளிப்படுத்தல் 20 ஆம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த யுத்தம் தான், அது நடக்கவிருக்கும் தெளிவான காலக்கட்டத்தோடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த யுத்தம் நாம் மேலே பார்த்த மற்ற மூன்று யுத்தங்களின் காலக்கட்டத்தினின்று முற்றிலும் வேறுபட்ட காலத்தில் நடக்கிறது.

‘‘அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.’’ (வெளி 20:7,8)

மற்ற மூன்று யுத்தங்களும் ஏழாம் கலசத்தின் காலத்தில், அதாவது இயேசுவின் வெளிப்படையான இரண்டாம் வருகையை ஒட்டிய நாட்களில் நடக்கும். அதன் இறுதியில் மிருகமும், கள்ளத்தீர்க்கதரிசியும் பிடித்து அக்கினியில் தள்ளப்படுவார்கள் என்று அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த கோகு, மாகோகு யுத்தம், ஆயிரம் வருட அரசாட்சி முடியும்போது நடைபெறும் என்றும், அதன் இறுதியில் சாத்தான் என்ற வலுசர்ப்பம் ஏற்கனவே மிருகமும், கள்ளதீர்க்கதரிசியும் தள்ளப்பட்ட அக்கினிக்கடலிலே நிரந்தரமாகத் தள்ளப்படுவான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த கோகு, மாகோகு யுத்தம் மற்ற யுத்தங்களோடு சம்பந்தப்பட்டது அல்ல. இது தான் பிசாசு நிரந்தரமாக அழிக்கப்படும் யுத்தமும் கூட.

‘‘மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்’’ (வெளி 20:10)

இந்த கோகு, மாகோகு யுத்தம் உலகின் ராஜ்ஜியங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் அது நடக்கவிருக்கும் இடம் நிச்சயமாக இயேசு ஆட்சிசெய்யவிருக்கும் இஸ்ரவேலும், எருசலேமும் தான்.

ஒரே யுத்தமா? பல யுத்தங்களா?

இத்தனை விதமான யுத்தங்களைப் பார்த்ததும் ‘இவர் என்னதான் சொல்ல வருகிறார்’ என்று நீங்கள் குழம்பலாம். இந்த நான்கு விதமான யுத்தங்களில் ‘ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பின்பு நடைபெற இருக்கும் கோகு, மாகோகு யுத்தம்’ முற்றிலும் வேறுபட்ட காலத்தில் நடக்கவிருப்பதாக நேரடியாகவே சொல்லப்பட்டிருப்பதால், அதை தற்போதைக்கு கணக்கில் எடுக்காமல், மற்ற மூன்று யுத்தங்களை மட்டும் பற்றி ஒரு முடிவுரையைப் பார்ப்போம். இந்த முதல் மூன்று வகையான யுத்தங்களில் பல ஒற்றுமையைப் பார்க்க முடியும்.

  • மூன்றும் முடிவுகாலத்தில், அதாவது ஏழாம் கலசத்தின் காலத்தில் நடக்கவிருப்பவைகளாகும்.
  • மூன்றிலும் பூமியின் சகல ராஜாக்களும் பங்கெடுக்கிறார்கள்.
  • மூன்றும் இதுவரை உலகம் காணாத பேரழிவு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் யுத்தமாக இருக்கும்.
  • மூன்று யுத்தங்களின் முடிவிலும் ராஜ்ஜியங்கள், ராஜாக்கள், புறஜாதி பட்டணங்கள் விழுந்து அழிந்தன.
  • மூன்று யுத்தங்களும் இயேசுவின் இரண்டாம் வருகையை ஒட்டின காலகட்டத்தில் தான் நடக்கவிருக்கின்றன; இந்த யுத்தங்கள் நடக்கும் காலத்தில் அல்லது முடியும் காலத்தில் தான் இயேசு வெளிப்படுகிறார்.
  • மூன்றிலும் தேவனுடைய கோபாக்கினை வெளிப்படுகிறது.
  • மூன்று யுத்தங்களும் இயேசுவிற்கும் அவரது சேனைகளுக்கும் எதிரான யுத்தங்களாக சொல்லப்பட்டுள்ளது.
  • மூன்றிலும் இயேசு நேரடியாக எதிரிகளை அழிக்கிறார்.

என்ன வித்தியாசம்?

இந்த மூன்று யுத்தங்களில், எருசலேமில் நடக்கும் யுத்தம் தவிர மற்ற இரண்டு யுத்தங்களில் மிருகம் மற்றும் அதன் கூட்டணிகள் பங்கெடுப்பதால் ஐரோப்பாவை மையமாகக் கொண்ட மூன்றாம் உலக யுத்தமாக இருக்கலாம். அதன் ஒருபகுதியாக எருசலேம் மீதான படையெடுப்புகளும் இருக்கும். இந்த காலங்களின் முடிவில் இயேசு வானத்தில் வெளிப்படுவாரென்று அறிகிறோம். இந்த யுத்த முடிவில் இயேசு ஒலிவமலையின் மீது வந்து நிற்பார் என்றும் அறிகின்றோம். இயேசுவின் இரண்டாம் வருகை என்பது ஒரே சம்பவமாக இருப்பதால், இந்த மூன்று யுத்தங்கள், முடிவுகாலத்தின் ஒரே உலக மகாயுத்தமாகவோ அல்லது அதன் தொடர் யுத்தங்களாகவோ இருக்கலாம்.

இதுவரை கற்றுக்கொண்ட யுத்தங்களை, காலக்கட்டத்தின் அடிப்படையில் பின்வரும் வரிசைப்படி நடக்கலாம் என்று உத்தேசமாகக் கொடுத்துள்ளேன். இதன்படி தான் நடக்கும் என்று சாதிக்கவில்லை; அது நடக்கும்போது தான் நமக்கு இவை தெளிவாக வெளிப்படும்.

அட்டவணை 32: முடிவுகால யுத்தங்களின் காலவரிசை